யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/18

முதல் வகுப்பு -அனைத்து எழுத்துகளும்- கற்பிக்கும் முறை- QR code video

தொடக்க நிலை மாணவர்களுக்கு பயன்படும் English 5 Letter Words - Video

Cursive Hand writing for Students step by step - Video

5th std Maths- Video Lesson - Numbers and Place Value -Part 1

CLASS ROOM VIDEOS- Writing Alphabets

CLASS ROOM VIDEOS- Writing Alphabets

CLASS ROOM VIDEOS- 4th std -Science- Special Sense of Animals- Video Lesson

7th Std - Term 1 - English - Bat ( Unit 1 Poem ) - Video Lesson

6th Std - Term 2 - QR Videos - Tamil - Page 64

(47) Tamil Rhymes for Children பச்சைக்கிளி - தாயெனப்படுவது தமிழ் -


6th Std - Term 2 - QR Videos - Tamil - Page 56

6 ஆம் வகுப்பு தமிழ் எழுத்துகளின் வகை தொகை


(47) +1 தமிழ் 11-TA-U1-பேச்சு மொழியும் கவிதை மொழியும் - YouTube


B.com/M.com & B.ed முடித்தால் ஊக்க ஊதியம் பணிநியமனம் பெற்ற நாள் அல்லது மேற்கண்ட படிப்பு படித்து முடித்த நாள் - இரண்டில் எது முந்தையதோ அந்நாள் முதல் அனைத்து சட்டப்பூர்வமான பலன்களையும்/பயன்களையும் பெறத்தகுதி உடையவர் ஆவார்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது




டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 9 கருணை மதிப்பெண் வழங்க வல்லுநர் குழுவுக்கு உத்தரவு

TNPSC குரூப் 2 தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள்! தவறை ஒப்புக்கொண்டது
கடந்த 11ம் தேதி தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு வினாத்தாளில் தவறான விடைகள் இருப்பதாக புகார் எழுந்தது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதனை அடுத்து ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டியும் என கோரிக்கை எழுந்திருந்தது. TNPSC இது எங்கள் தவறு இல்லை என்றும் வினாத்தாள் தயாரித்த வல்லுநர் குழுவின் தவறு எனவும் கூறி வந்தது.

இந்நிலையில் ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வல்லுநர் குழுவிற்கு TNPSC உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது

How to Apply Aadhar Card?

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தைத் அணுகுங்கள். பின்னர், பதிவு படிவத்தை நிரப்பவும் (படிவம் ஆன்லைனில் கிடைக்கும்)

அடையாள சான்று மற்றும் முகவரியின் ஆதாரம் போன்ற அடையாள ஆவணங்களுடன்
சேர்ந்து சமர்ப்பிக்கவும்
அனைத்து ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு,
உங்கள் கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி ஸ்கேன் அடங்கிய
உங்கள் பயோமெட்ரிக் தரவை சமர்ப்பிக்கவும்
உங்கள் புகைப்படத்தையும் ஆதார் எடுத்துச்செல்கிறது
14-இலக்க பதிவு எண் கொண்ட அடையாளம் சேகரிக்கவும்,உங்கள் ஆதார் அட்டையைப் பெறும் வரை ஒப்புதல் சீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
பின்னர் உங்கள் ஆதார் கார்டு உங்கள் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்படும்

SSA - 1Day Workshop on Technology for Teachers | by British council*

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வரும் சனி(24/11/18)) வேலைநாள்: CEO PROCEEDINGS

இந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள்

ஆன்லைனில் பாதுகாப்பாக பயனாளிகல் பயன்படுத்தும் அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்துடன், இந்தியாவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை கூகுள் உருவெடுத்துள்ளது, பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதன் மூலம் இணையத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்க உதவும் வகையில் கூகுள் வடிவமைத்துள்ளது.

இந்தியாவில் அமைக்கப்படும் புதிய பாதுகாப்பு மையம் இங்குள்ள பயனர்கள் பல்வேறு பாதுகாப்பு கருவிகளையும், அடிப்படை பாதுகாப்பு வழிகாட்டல்களில் இருந்து, தரவு பாதுகாப்பு, தனியுரிமை கட்டுப்பாடுகள், மற்றும் இணையத்தில் குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தினை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான உதவிக்குறிப்புகள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களுக்கு பரந்த அளவிலான கருவிகள் மற்றும் ஆதாரங்களை கூகுள் தற்போது வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புரொடக்ட் மேனேஜ்மெண்ட் டைரக்டர் மார்க் ரிஷர் இதுகுறித்து கூறியபோது, "கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் பல டூல்ஸ்களை பயனர்களுக்காக உருவாக்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். அந்த வகையில் தற்போது கூகுளின் பாதுகாப்பு அமைப்பு, கூகுள் சேவைகளில் அவற்றின் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு அவற்றிற்கு அதிகாரம் அளிப்பதாகவும் உள்ளது.
இந்த புதிய சேவை இந்தியாவில் உள்ள மேலும் ஒன்பது மொழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அவை இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் ஆகும்.

இன்றைய இந்தியா உலகில் இண்டர்நெட் அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இதுபோன்ற ஒருசில வசதிகள் கொடுத்து ஸ்மார்ட்பொன்களில் டேட்டா பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்த முடியும் என கூகுள் நிறுவனத்தின் டிரஸ்ட் அண்ட் சேஃப்டி இயக்குனர் சுனிதா மொஹந்தி அவர்கள் கூறியுள்ளார்.

மொஹந்தி இதுகுறித்து மேலும் கூறுகையில், "இணையம் எல்லோருக்கும் வாழ்க்கையை எளிதாகவும் சுலபமாகவும் மாற்றுவதோடு அனைத்து வயதினர்களுக்கும் உதவும் வகையில் உள்ளது. ஆன்லைன் பயனர்கள் அல்லது முதல் தடவையாக ஆன்லைனில் வருபவர்களிடையே ஆராய்ந்து, உருவாக்குவதற்கும், ஒத்துழைப்பதற்கும் பல வாய்ப்புகளை வழங்குகிறது, சாத்தியமான எதிர்மறை அனுபவங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் இணையத்தில் அவை பாதிக்கப்படுவதால், இது பயனர்களுக்கு பல தகவல்களை கற்று கொடுப்பதோடு, இணையத்த்ல் உலாவும்போது அவை வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் அச்சுறுத்தல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இணையத்தின் தரவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல கருவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவேதான் கூகுள் நிறுவனம் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கவும் கூகுள் அக்கவுண்ட் மூலம் பல டூல்ஸ்களை கொடுத்து வருகிறது. பிரைவைட் செக்கப், மை ஆக்டிவிட்டி ஆகியவை பயனர்கள் தங்களுடைய தேவையை, டேட்டா அளவை சரிசெய்து கொள்ள இந்த கூகுள் அக்கவுண்ட் உதவுகிறது.

அதேபோல் கூகிள் குடும்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு என இரட்டிப்பு பாதுகாப்பை வழங்குகிறது.. ஃபேமிலி லிங்க் செயலியானது பெற்றோர்களால் டிஜிட்டல் செட் செய்யப்பட்டு அவர்களே மேனேஜ் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களின் கூகுள் அக்கவுண்ட், அவர்களுடைய சாதனம் மற்றும் செயலிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கின்றது

நீதிக்கதை



ஆணவம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.
வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும், மேதமை கொள்வான்.
மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என் ஆணவம். அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக்கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தயுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆனவத்துடன் பேசினான்.
அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார்.

அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மவுனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், ‘கொஞ்சம் உணவு கிடைக்காதா?’ என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயியிடம், ‘ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும்’ என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, ‘படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான்’ என்றார். தொடர்ந்து அவர், ‘இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம்’ என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான், தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.