யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/12/18

*Passport நிறுவனத்தில் 17000 Assistant Passport Officer வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது*



வேலையின் பெயர்: 17000 Assistant Passport

சம்பளம் : Rs.93,000

தேர்வு முறை: Written test, Interview

Apply Link:  https://goo.gl/WTcnxW

கல்வி: Any Graduation/ Degree

கடைசி நாள்: 19.12.2018

மேலும் தகவலுக்கு Click Here:  https://goo.gl/WTcnxW


உடல்நலம் மருத்துவம்,






































மாவட்ட கல்வி அதிகாரி( District Educational Officer (DEO) )


காலிப்பணியிடங்கள் : 20 

ஆரம்ப தேதி :10-12-2018 

கடைசி தேதி :09-01-2019

தேர்வு தேதி    :02-03-2019

தகுதி :

B.Ed

M.A

M.Sc

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf


இணைய முகவரி :

http://tnpscexams.in


விண்ணப்பிக்கும் முறை :

தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் http://www.tnpsc.gov.in மூலம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்.


சம்பளம் : ரூ56900- ரூ180500


தேர்வு நடைமுறை :

Preliminary Examination,

Main Examination & Interview

கட்டண விபரம் :

Registration Fee :150/-

Preliminary Examination Fee :100/-

Main Written Examination Fee :200/-




I Would like to share this with you. Here You Can Download This Application from PlayStore https://play.google.com/store/apps/details?id=com.app.tamilinfonews

உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றப்படுகிறது - CEO PROCEEDINGS

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-13-12-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் : 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

பழமொழி:

Every cock will crow upon its dung hill

தன் ஊரில் யானை; அயலூரில் பூனை

பொன்மொழி:

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!


இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1) யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?

சீனா

2) யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?

பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்

நீதிக்கதை :


ரொட்டித் துண்டு!


தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், “”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். “”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லாரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய துண்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்.

ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.

“”ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள் அவள்.

“”சிறுமியே! உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்…” என்றார் செல்வர்.


துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.


இன்றைய செய்தி துளிகள் : 

1.அரசு பள்ளிகளில் LKG,UKG - வகுப்புகள் ஜனவரி-21ல் தொடக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்

2.முல்லை பெரியாறில் விரைவில் புதிய அணை கட்டப்படும் : கேரள முதல்வர் திட்டவட்டம்

3.ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

4.தமிழகத்தின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 15, 16-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

5.சீனாவின் குவாங்ஷுவில் நடைபெறும் உலக பாட்மிண்டன் சம்மேளன டூர் பைனல்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்

SAMAGRA SHIKSHA - One Day Training for P.G.Teachers!!




நீதிக்கதை :சிந்தனை கதைகள்



நான் கத்தவே இல்லை



கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.


மயங்கி விழுந்தார் விமானி.

2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கை, இடைக்கால உத்தரவிற்காக நாளைக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கை, இடைக்கால உத்தரவிற்காக நாளைக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஆசிரியர்கள் பொது இடமாறுதல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெற வேண்டும். இடமாறுதலுக்கான காரணம் அந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடைபெறாமல், ஊழல் அடிப்படையில் நடந்துள்ளது.

மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில்  இடமாறுதல் நடைபெறும். தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள்,  வடமாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட மாட்டார்கள். ஆனால், இவ்வாண்டு நடைபெற்ற ஆசிரியர் பொது இடமாறுதலில், விதிகளை மீறி பல இடமாறுதல்கள் நடைபெற்றுள்ளன. இதற்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல கோடிகளை எட்டும். இதனால் பிற மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற இயலாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வெறும் 5 மாதங்கள் பிற மாவட்டங்களில்  பணியாற்றியவர்கள், லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

பதவிஉயர்வையும் லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர். வெளிப்படையின்றி, லஞ்ச அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்த ஆசிரியர் பொது இடமாறுதல், பிற ஆசிரியர்களின் நலன்களை பாதிக்கும் வகையில்உள்ளது. எனவே, லஞ்ச அடிப்படையில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் குறித்து புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அரசாணை எண் 403 அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்.  ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 11,990 பேர் இந்த கலந்தாய்வில் பங்கெடுத்ததாகவும், விதிப்படி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்காக நாளைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Attendance App மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக:

பாடப் புத்தகங்களில் டிஜிட்டலை அறிமுகப்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை: சிறப்புப் பயிற்சி பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்:

பாடப் புத்தகங்களில் க்யூஆர் கோடு அச்சிட்டு அதன்மூலம் டிஜிட்டல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளிக் கல்வித் துறை.

இதற்காகஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தவறவிடாதீர்

என்சிஇஆர்டி குழந்தைகள் கல்வித் திருவிழா:
விருதுகள்பெற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

இதுகுறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆங்கில ஆசிரியர் சங்கர்.''அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான நான், ஆர்வத்தின் காரணமாக ஆசிரியர் பணிக்கு வந்தேன். 2005-ல் இருந்து பாடங்களை வீடியோ வடிவில் மாற்றிவருகிறேன். தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பாக பாடப்புத்தகங்களில் க்யூஆர் கோடை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த  க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பாடங்களை டிஜிட்டல் வடிவத்தில் படிக்கலாம்.இதை உருவேற்றப்பட்ட (Energised) பாடப் புத்தகங்கள் என்று அழைக்கிறோம். இதில் க்யூஆர் கோடு மூலம் இயங்குரு (Animated) பாடங்களைப் பார்க்கலாம், படிக்கலாம்.பாடப் புத்தகங்களை ஆசிரியர்களைக் கொண்டே டிஜிட்டலுக்கு மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. ஏனெனில் வகுப்பறை சூழலில் மாணவனின் செயல்பாடுகளை நன்கு உணர்ந்தவர்கள் ஆசிரியர்களே. அவர்களுக்குத்தான் அதன் தேவை தெரியும் என்பதால் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி கொடுத்து, அவர்கள் மூலம் பாடத் திட்டத்தில் டிஜிட்டல் வடிவத்தைச் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.

முதலில் காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அங்குள்ள 16 வட்டங்களில் இருந்து 160 ஆசிரியர்கள் ஆரம்ப கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேர்வுகள் வைக்கப்பட்டன. அதில் இருந்து ஆசிரியர்களை வடிகட்டினோம். அதில் 25 முதல் 40 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாக்குவது எப்படி? கதை,உள்ளடக்கத்தை எப்படிச் சொல்ல வேண்டும், பின்னணியில் குரல் கொடுப்பது எப்படி, எங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஷங்கர்.

அத்துடன், கணினியில் தமிழை எழுதுவது எப்படி, மொபைலில்எடுக்கப்பட்ட ஆடியோக்களை எப்படி எம்பி3 வடிவத்துக்கு மாற்றுவது, வீடியோ உருவாக்க செயலியான கேம்டேசியா அறிமுகம், எப்படி வீடியோ எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம்.காலை முதல் மதியம் வரை பயிற்சி, மதியத்துக்கு மேல் செய்முறை வகுப்புகள் என்று 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் நன்றாகக் கற்றுத் தேர்ந்தனர். அடுத்ததாக திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வாரம் ஒரு முறை என்ற வீதத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 100 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதில் இருந்து 85 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கும் அதே பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் தற்போது டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் சிறப்பான புலமை பெற்றுள்ளனர்.இதே திட்டத்தை மற்ற மாவட்ட ஆசிரியர்களிடமும் விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது. இதன்மூலம் நம்முடைய பாடத் திட்டம் தேசிய அளவிலான தரத்துக்கு உயர்த்தப்படும்'' என்கிறார் சங்கர்.

தொடர்புக்கு:
ramaniprabhadevi.s@thehindutamil.co.in

814 பணியிடங்கள் : பள்ளிக்கல்வி துறை உத்தரவு:

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 814 காலியிடங்களில், கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வியின், புதிய பாட திட்டத்தில், கணினி அறிவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளஸ் 1 படிப்பில், தொழிற்கல்வி பாட பிரிவில், கணினி அறிவியல், கட்டாய பாடமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால், கணினி அறிவியல் படித்த ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, 2,896 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 814 கணினி அறிவியல் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில், புதிய ஆசிரியர்களை நியமிக்க, தமிழக பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.'மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர் அடங்கிய குழு வாயிலாக, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே,புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் வரை, தற்காலிக ஆசிரியர்கள் பணியில் இருக்க முடியும். அதன்பின், அந்தஇடத்திற்கு புதிதாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் : காலக்கெடு நீட்டிப்பு!

பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு நிறுவனத்திலும் டிச., 10 வரை பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த வாய்ப்பு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்புகொண்டு, இதை பயன்படுத்தி பி.எப்., பணத்தை பெறும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம், என்றார்.

MIE Programme for BRTE's & District Coordinators:

வட தமிழகத்தில் வரும் 15ம் தேதி பரவலாக கனமழை,16ம் தேதி மேலும் மழை தீவிரம் அடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியீடு....

இருளில் தவித்த புதுக்கோட்டை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்காக சோலார் விளக்கு வாங்கிக்கொடுத்த சேலம் ஆசிரியை!-நெகிழ்ச்சி சம்பவம்!!

கஜா புயலால், மின்சாரம் இன்றி மாணவர்கள் படிக்க சிரமப்படுவதை அறிந்த, சேலம் ஆசிரியை மோனிகா, மேற்பனைக்காடு கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளி படிக்கும் 10 மாணவர்களுக்கு சோலார் மின் விளக்குகளை வாங்கிக் கொடுத்து அவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

தற்போது, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்கி உள்ளதால், மின்சாரம் இன்றி, படிக்க முடியாமல், மெழுகுவத்தி வெளிச்சத்தில் மட்டுமே படித்து வருகின்றனர். இந்தத் தகவலை கல்வியாளர்கள் சங்கம் மூலம் அறிந்த சேலத்தைச் சேர்ந்த ஆசிரியை மோனிகா, முதல்கட்டமாக, கிருஷ்ணகிரியில் இருந்து 10 சோலார் மின் விளக்குகளை வாங்கி மின்சாரம் இன்றி சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட மாணவர்கள் அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.
வெளியூரிலிருந்து ஆசிரியை ஒருவர் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு சோலார் விளக்குகள் வாங்கிக் கொடுத்துள்ளதை அறிந்த அந்தப் பகுதி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிலர் மின்சாரம் இன்றி படிப்பதற்கு சிரமப்படும் மாணவர்களுக்குத் தங்கள் செலவில் சோலார் மின் விளக்குகள் வாங்கிக் கொடுக்க முன்வந்துள்ளனர்

பள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்..! பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...!

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய மாணவர் வருகை பதிவு தொடக்க விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய மாணவர் வருகை பதிவை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலில் இந்த திட்டம் இந்த பள்ளியில் தொடங்கப்பட்டு உள்ளது.
நாளடைவில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடை முறைப்படுத்த திட்டம் தீட்டி உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம், ஓவ்வொரு பள்ளியிலும் மூன்று மணி நேர மனித உழைப்பு மிச்சப்படுகிறது. ஆசிரியர்களின் மனித உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவிகள் பள்ளிக்கு வருகை புரிந்த நேரமும், பள்ளி நேரம் முடிந்து பள்ளியிலிருந்து வெளியேறிய நேரமும் புகைப்படத்துடன் பதிவு செய்யப்படுகிறது. வருகை புரியாத போதும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மாணவிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் school management system இல் பதிவேற்றப்படுகிறது.
இதனால் மாணவிகளின் வருகைப்பதிவு, மட்டுமல்லாமல் கல்வித்திறன் சார்ந்த விவரங்களும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் தமைமை ஆசிரியர் மற்றும் ஆசியர்களால் தொடர்ந்து கண்காணிக்க வசதி செய்யப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில், இணையதளம் வாயிலாகவே தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை பெற்றோர்கள் அறிய வைக்கப்படும்.

ஜனவரி 21ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்:

வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாகவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக அரசு, பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அமலுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சூழ்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு, சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.  தொடர்ந்து இது அடுத்தடுத்த பள்ளிகளில் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் முடிவுக்கேற்ப வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

ஜாக்டோ-ஜியோ - உயர்நீதிமன்ற நிகழ்வு குறித்து 16.12.2017-ல் மாவட்டங்களில் விளக்கக் கூட்டம்:



தினமும் 24 வகை பதிவேடுகள்! ஆசிரியர்களை பாடாய் படுத்துகிறதா கல்வித்துறை?

TN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா? - உஷார்?

நமது பள்ளி அமைவிடம்  longitude and latitude அடிப்படையில், ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மட்டுமே ஆன்லைன் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.

 பள்ளிக்கு வெளியே அரை கிலோ மீட்டர் தள்ளியிருந்து ஆன்லைன் வருகைப் பதிவு செய்தால்,Location தவறு என உயர் அலுவலர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும் என்பதால், இதை தவிர்க்க காலை 9.00 மணிக்கெல்லாம் வருகை புரிந்து, தாமதமாக வரும் மாணவர்களை 9:15 க்குள்பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும். நமது கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலர் மற்றும் SPD ஆகியோர் ஆன்லைன் வருகைப் பதிவு செயல் படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவதால், அதற்கேற்ப சரி செய்து கொள்வது நல்லது.


மிக விரைவில் ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் வருகைப் பதிவு செயல்படுத்தப் படும்  எனவும் கூறப்படுகிறது. ஆசிரியர்களின் ஆதார் எண் ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இனிமேல் ஆசிரியர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.15 வரை, பள்ளியில் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், இவற்றை ஆன்லைனில் வட்டாரக் கல்வி அலுவலகம் முதல் கல்விச் செயலர் அலுவலகம் வரை, ஆசிரியர்களை கண்காணிக்கும் வகையிலும் செயலி மேம்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.உங்கள் பள்ளியின் longitude and latitude பதிவு செய்யப்பட்டு இருப்பதை EMIS இல்  பார்த்து தெரிந்து கொள்ளலாம்