சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கபட்டதின் காரணம் என்ன எனவும், பிளஸ் டூ முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தப்படாதது ஏன்? எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, மே 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ நடத்திய தேர்வுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து நீதிமன்றங்களில் வழக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்படி நீட் மதிப்பெண்ணுடன் 2மதிப்பெண்ணை சேர்க்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கபட்டதின் காரணம் என்ன?
எனவும், பிளஸ் டூ முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தப்படாததற்கு காரணம் என்ன? எனவும் சிபிஎஸ்இ க்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.
மேலும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? கல்வித்தரம் இல்லாத நிலையில் நீட்தேர்வை அனைவரும் எதிர்கொள்வது எப்படி? எனவும் கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து நீட் மதிப்பெண்ணுடன் 2 மதிப்பெண்ணை சேர்க்க கோரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தவதாக உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.