யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/6/17

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் !!!

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., — பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே, 7ல், ‘நீட்’ தேர்வு நடந்தது. தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:

பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டு ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும், 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படும். மாநிலத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஜூலை, 7ம் தேதி மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8 மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவங்கள் பெற, ‘செயலாளர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை’ என்ற பெயரில், 500 ரூபாய்க்கான வரைவோலை (டி.டி.,) எடுக்க வேண்டும். சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்; மாணவர்கள் அதற்கான ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும்.

அரசுமற்றும் தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிவரை வினியோகிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் படிவங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க வேண்டியதில்லை. ஜூலை, 14ம் தேதி தரப்பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பங்களுக்கான டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின், சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. !!!

சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு,
ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 1ல் துவங்கியது; ஆக., 31 வரை விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை பெற, மத்திய, மாநில அரசு நடத்தும் தேர்வுகளில், குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்திலும், www.minorityaffairs.gov.in என்ற இணையதள இணைப்பு மூலமும்விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய விடுப்பு நாட்களை கழிப்பது பற்றிய விளக்கம்

தொகுப்பூதிய வழக்கு தொடுக்க காரணங்கள், தொகுப்பூதிய கால இழப்புகள் மற்றும் அரசமைப்பு விதிகள்



தொடக்கக்கல்வி செயல்முறைகள் - நாள்:23/6/17-மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்கள் இயக்குனரிடம் தெளிவுரை கேட்டல் என்ற பெயரில் காலம் கடத்தாமல் உடனடி முடிவெடுக்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பி.லிட் மற்றும் DTEd முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்

அரசுப் பள்ளியில், தாய் மொழி வழிக் கல்வியில் படியுங்கள்..! - சீன தமிழ் விஞ்ஞானியின் ஆலோசனை

அவன்பெயர் சரவணன். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமம். சிறு கிராமத்தில் வசித்தாலும் நில புலன்கள் ஏராளம். வசதிக்கும் குறைவில்லை. இன்னும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில், அவர்கள் சொந்த
தேவைக்கென்று இயற்கை விவசாயம் செய்வதால், அந்த இடத்திற்கு பறவைகள் அதிகமாக வரும். அதனால் இயல்பாக அவனுக்கு பறவைகள் மீது ஈர்ப்பு அதிகம். பறவைகளுடன் பேசுவான், விளையாடுவான். மனிதர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்கவே விரும்பும் பறவைகளும், அவனுடன் விளையாடும்.'


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

Why do you bother ? The Plague killing Democracy
பறவைகள் மீது கொண்ட அலாதி காதலால், அவனுக்கு பறவையியல் (Ornithology) படிக்க வேண்டுமென்று விருப்பம் வந்தது. இந்த விருப்பம் வந்த போது, அவன் ஓசூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இணையத்தில் எப்படியோ தேடி சலீம் அலி மையத்தை பற்றியும் தெரிந்து கொண்டான்.

ஆனால், அவன் பெற்றோர்களுக்கு எப்போதும் பறவைகளை பிடித்ததில்லை. தங்கள் நிலத்தில் விளையும் சோளப் பயிர்களை சிதைக்கும் வில்லன்கள்தான் பறவைகள். இந்த புரிதலுடன் அணுகியதால், அவர்களால் பறவைகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை, பறவைகளின் காதலனான சரவணனையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மருத்துவர் ஆக வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தார்கள். கல்வி நிலையமும் அவன் பெற்றோருடன் இணைந்து கொண்டது. அவனால் அழுத்தங்களை தாங்க முடியவில்லை. முதலில் வீட்டார்களுடன் பேசுவதை நிறுத்தினான். பின் பள்ளியையும், பெற்றோரையும் பழி வாங்க எண்ணி, பத்தாவது வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தான்.

சமீபத்தில் அவனை ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்தேன். இறுக்கமான ஒரு மெளனத்திற்கு பின், அவன் பேசினான். பறவைகளை குறித்து துவங்கிய நிறைய பேசினான். அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவன், “ உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை நீங்க கொல்லுவீங்களா சார்..? " என்றான். “நிச்சயம் முடியாது... என்னால் மட்டுமல்ல எவராலும் முடியாது...” என்றேன். " இல்லை சார்... அதெல்லாம் ச்சும்மா... இங்க எல்லாரும் அவங்களுக்கு மிகவும் பிடிச்சவங்களை தினமும் கொன்னுட்டுதான் இருக்கிறாங்க.... கொல்றதுன்னா ரத்தம் தெறிக்க கொல்றது இல்ல சார்... அவங்க கனவுகளை கொல்றது... என்னை என் பெற்றோர் கொன்ன மாதிரி...” என்றவன், தன் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றுவிட்டான்.

ஆம், உண்மைதானே..? ஒருவரின் வாழ்வென்பது அவர்களின் கனவுகளால் கட்டமைக்கப்பட்டது. அந்த கனவுகளைக் கொன்றால், அவர்கள் உயிர் வாழ்வார்கள்தான். ஆனால், அது அவர்கள் வாழ்வாக இருக்காது.

சரிகட்டுரைக்கு வருவோம். இது கல்வி குறித்த ஆளுமைகளுடனான உரையாடலின் மூன்றாவது பகுதி.

விஜய் அசோகன். ஒரு சிறு கிராமத்தில், மத்திய தர குடும்பத்தில் பிறந்தவர். மத்திய தர குடும்பத்திற்கே இருக்கும் அபிலாஷைகளை எதிர் கொண்டவர். கடும் காதலால் (ஆம். முயற்சி என்ற சொல்லை வெறுக்கிறார்) ஆராய்ச்சியாளராக உயர்ந்தவர். நானோ தொழிற் நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது சீனாவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவை மட்டும் அவர் அடையாளங்கள் அல்ல. இவர் தொடர்ந்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

அவருடனான உரையாடலில் இருந்து...


கல்வி குறித்து, அறிவு தளத்தில் உங்களின் தொடர் செயல்பாடுதான், உங்களை பேட்டி எடுக்க என்னை தூண்டியது. உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள், அரசுப் பள்ளி, தாய்மொழி வழிக் கல்வி போன்ற விஷயங்களில் மெளனம் காக்கின்றபோது, உங்களுக்கு இதில் இயங்க வேண்டும் என எப்படி விருப்பம் வந்தது...?

என்பெற்றோர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரமும்... பின் நான் படித்த தனியார் பள்ளியும்தான் முதன்மையான காரணங்கள்.

என்னதனியார் பள்ளியா...?

ஆம். அங்கு நான் பெற்ற சில கசப்பான அனுபவங்கள்தான். என்னை அரசுப் பள்ளிக்காக குரல் கொடுக்க தூண்டுகிறது என நினைக்கிறேன். ‘பாருங்க... இவனுங்க நல்லா தனியார் பள்ளியில் படிச்சிட்டு நம்மை அரசு பள்ளியில சேருங்கன்னு புத்தி சொல்ல வந்துடுறாங்க...’ என்று எண்ணாதீர்கள். நான் என் பள்ளி வாழ்க்கையை தனியார் பள்ளியில் துவங்கினாலும், நான் அங்கு தொடரவில்லை. அந்தப் பள்ளி என்னிடம் இருக்கும் பிற ஆற்றல்களை பார்க்காமல், கல்வியை திணிப்பதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. நான் சுதந்திரமாக சிந்திப்பதை, அப்பள்ளி விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கும் பள்ளிக்குமான இடைவெளி மனதளவில் தொலைவாகியாது. நல்லவேளையாக எனது அப்பா என்னை புரிந்துகொண்டார். அங்கிருந்து வெளியேறி என் படிப்பை அரசு பள்ளியில் தொடர்ந்தேன்.

உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்...?

எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் கவின் திலீபனுக்கு ஆறு வயது. இரண்டாவது மகன் கதிர் நிலவனுக்கு நான்கு வயது. இன்னும் இருவரையும் பள்ளியில் சேர்க்கவில்லை. ஆறு வயதில்தான் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அடுத்த மாதம் நான் சீனாவிலிருந்து வருகிறென். என் மனைவி தன் ஆராய்ச்சி படிப்பில் அடுத்த மாதம் கோவையில் சேர உள்ளதால், அந்த பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் நிச்சயம் சேர்த்துவிடுவேன்.

உங்கள் வீட்டில் புரிந்து கொள்கிறார்களா...?

முதலில் என் மனைவிக்கு சில தயக்கங்கள் இருந்தன. ஆனால், எங்களுக்கிடையேயான உரையாடல் அந்த தயக்கத்தை சரி செய்தது. ஆனால், சுற்றத்தாரின் பார்வைதான் மிக மோசமானதாக இருக்கிறது. 'அரசுப் பள்ளியில் சேர்க்கப் போகிறோம்' என்று சொன்னால் மிக பரிதாபமாக பார்க்கிறார்கள். நாங்கள் ஏதோ பணத்தை சேமிப்பதற்காக இது போல் செய்கிறோம் என்றும், வறட்டுப் பிடிவாதம் என்றும் பரிகாசம் செய்கிறார்கள். எங்களிடம் அந்த கிண்டல் பேச்சுகள் வந்தால், அதற்கு நாங்கள் உரிய எதிர்வினையை ஆற்றிவிடுவோம். ஆனால், எங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சென்றார்கள் என்றால்...? இந்த பரிகாசங்கள் அவர்களை எவ்வளவு உளவியல் ரீதியாக பாதிக்கும்...? இதுதான் அச்சமாக இருக்கிறது.

உண்மையை சொல்லுங்கள்... தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் நன்றாகவா இருக்கிறது....?

100 சதவீதம் நன்றாக இருக்கிறது என்பது என் வாதம் அல்ல. இங்கு தனியார் பள்ளிகளும் நூறு சதவீதம் தரமாக இருக்கவில்லையே...? அரசு பள்ளிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அதை புறக்கணிப்பதன் மூலம் சரி செய்து விட முடியாது. அரசுப் பள்ளிகளை நாம் மறுப்பதன் மூலம், கல்வி அளிப்பது அரசின் கடமை என்பதையும் மறுக்கிறோம். அரசுப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்த்து, அரசை கேள்வி கேட்பதன் மூலம்தான் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடியும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இங்கு தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்குவதில்லை.பெரும்பாலான தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாமல் தான் இயங்குகின்றன. தீப்பெட்டி போன்ற வகுப்பறைகள்... இவ்வளவு இறுக்கத்தில் குழந்தைகள் படித்தால், அவர்களின் சிந்தனை திறன் எப்படி வளரும்...? தனியார் பள்ளிகளில் 1 சதவீதம்தான் அனைத்து வசதிகளுடன் தரமாக இருக்கின்றன. அது பெரும் பணக்காரர்களுக்கான இடமாக இருக்கிறது. இந்த கணக்குடன் ஒப்பிட்டு பார்த்தால், பெரும்பாலான அரசு பள்ளிகள் தரமானதாக இருப்பதாக தோன்றுகிறது.

மீண்டும் சொல்கிறேன். அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியாது.

ஹூம்... புரிகிறது. நீங்கள் தமிழ் வழிக்கல்வி குறித்தும் தொடர்ந்து எழுதி, பேசி வருகிறீர்கள்தானே...?

தமிழ் வழிக் கல்வியாக சுருக்கி பார்க்காதீர்கள். தாய் மொழி வழிக் கல்வி என்று அதனை பாருங்கள். இயல்பாக தாய்மொழி வழிக் கல்வியில் படித்தால், குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். இதனை நான் மேம்போக்காக சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். நான் ஐரோப்பாவில் ஏழு ஆண்டு காலம் வசித்திருக்கிறேன். சீனாவில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். அங்கு குழந்தைகள் தங்கள் தாய் மொழியில்தான் படிக்கிறார்கள். அதனால்தான் விஞ்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது.

ஆனால், இந்த நவீனச் சூழலில் ஆங்கிலம் இல்லாமல் எப்படி சமாளிக்க முடியும்...?

இதுதான் நம்மிடம் இருக்கும் பிரச்னையே. தாய் மொழி வழிக் கல்வியில் படிப்பதென்பது பிற மொழிகளை புறக்கணிப்பதல்ல. ஆங்கிலம், ஜெர்மானிய மொழி, சீனம் என உங்களுக்கு விருப்பமான மொழிகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் பள்ளிக் கல்வியை, அறிவியலை, உங்கள் தாய் மொழிக் கல்வி ஊடாக படியுங்கள். அப்போதுதான் நம் மண்ணிற்கு தேவையான படைப்புகள் வரும்.

இதைத்தாண்டி அரசுப் பள்ளிகளை ஆதரிப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா...?

உண்மையாக குழந்தைகள் தம் கனவுகளின் கரம் பிடித்து வளரும் இடமாக அரசுப் பள்ளிகள் மட்டும்தான் இருக்கின்றன. பாடப் புத்தகத்தை தாண்டி அவர்களால் அங்குதான் நிறைய சிந்திக்க முடிகிறது என்பது என் அனுபவத்தின் ஊடாக நான் கண்ட உண்மை. நாம் அனைவரும் கரம் கோர்த்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தால், நிச்சயம் அங்கு படிக்கும் மாணவர்கள் சமுகத்திற்கு அளப்பெரிய பங்களிப்பை அளிப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளியில் படிக்கும் போது, குழந்தைகள் மீதான பொருளாதார அழுத்தங்கள் குறைகின்றன. இதனால் அவர்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. சுதந்திரமான மனநிலையில் இருப்பவர்களால்தான், நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

சரி. எப்படி அரசு பள்ளிகளை மேம்படுத்துவது...?

உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தால் என்ன செய்வீர்கள்... மாதம் ஒரு முறையாவது ஆசிரியர்களை சந்திப்பீர்கள்தானே...? ஆசிரியர்களிடம் சந்தித்து உரையாடுங்கள். பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மாவட்டக் கல்வி அலுவலரை சென்று சந்தியுங்கள். அரசியல் இல்லாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை கட்டமையுங்கள்.

இதையெல்லாம் தாண்டி, ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், துரதிருஷ்டமாக ஆசிரியர்களின் பங்களிப்பு கவலை அளிப்பதாக இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களையும் குறைகூறிவிட முடியாது என்றாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணரவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.


அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான போராட்டங்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுத்தால், நிச்சயம் மாற்றங்கள் வியக்கத்தக்கதாக இருக்கும்.

அன்புள்ள கணித ஆசிரியருக்கு...

நீங்கள் ஒரு மாணவரின் கல்வியில் மிக முக்கியமான பங்கு வகிப்பவர். கணிதமே வாழ்கைக்கு ஆதாரம். உயர் அறிவியல், கண்டுபிடிப்பு, பொருளாதாரம் என எந்த துறைக்கு சென்றாலும் அங்கே கணக்கு பிணைந்திருக்கும்.

சரி, கடிதத்தின் சாரத்திற்கு வருகிறேன். “நான் ஒரு கணக்கு பைத்தியம்” என்ற சின்ன கணிதத்தொடரினை எழுத ஆரம்பித்தபோது ”ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கின்றது? ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கவில்லை?” என்ற கேள்வியை எழுப்பினேன். இரண்டிலும் முதன்மையானதாக வந்த பதில் “ஆசிரியர்” என்பதே. பிற பதில்களும் வருத்தங்களும் இருந்தாலும் தற்சமயம் அதனை விட்டுவிடுவோம்.

ஏன்சிரமமாகின்றது?
1. *காட்சிப்படுத்துதல்*
படிக்கும் கணிதங்களையும் சூத்திரங்களையும் காட்சி படுத்த முடிவதில்லை. அறிவியலை அவன் எப்படியேனும் காட்சிப்படுத்திவிடுகின்றான், நிஜத்தில் பார்க்கின்றான், உணர்கின்றான் ஆனால் கணிதத்தை அவன்/அவள் காட்சிபடுத்துவதில்லை. பாடங்களில் உதாரணங்களைக் கொண்டு விளக்கினாலும் அவனால் அதனை காட்சிப்படுத்த முடியாமல் திணறுகின்றான்.

2. *தொடர்புபடுத்த முடிவதில்லை*
படிப்பவற்றை அவனால் தொடர்புபடுத்த முடிவதில்லை. ஏன் பயன்படுத்துகின்றோம் எங்கே பயன்படுத்தபடுகின்றது என்ற எந்த ஒரு தெளிவோ குறைந்த அறிவோ கிடைப்பதில்லை.

இவைஇரண்டுமே மிக முக்கியமான காரணங்களாக தங்களை தூர விலக வைக்கின்றன.

வகுப்பறைகளில் என்ன செய்யலாம்?
1. *காட்சிப்படுத்தல் முயற்சி*
இதுஆசிரியரின் கற்பனைக்கு உட்பட்டது. அதனை தொழில்நுட்பம் கொண்டு எளிமையாக காட்சிப்படுத்தலாம் அல்லது வகுப்பறைகளில் அந்த மாயத்தினை நிகழ்த்திக்காட்டலாம்.

2. *பயன்பாட்டு விளக்கம்*
கணிதம் எப்படி தொடர்ச்சியாக பயன்பட்டு வருகின்றது என விளக்கிக்கொண்டே இருக்க வேண்டும். தினசரி வாழ்வில் என்ன கணிதம் இருக்கு என கூற வேண்டும். தினசரிகளில் காணப்படும் கணிதம் என்ன என்று விளக்கலாம். ஒரு பாலத்தினைப்பார்த்தால் ஏன் அது அந்த வடிவில் இருக்கு அதில் இருக்கும் கணிதம் என்ன என்று விளக்கலாம். அளவீடுகளில் அவர்களை நேரடியாக களம் காணச்செய்யலாம். ஒரு லிட்டர் என்றால் எவ்வளவும், ஒரு கி.மீட்டர் என்றால் எவ்வளவு தூரம், ஒரு கிலோ என்றால் எவ்வளவு எடையுள்ளது என தங்கள் உணர்வுகள் மூலம் புரிந்துகொள்ளவேண்டும். இது ஒரு நெருக்கத்தினை எண்கள் மீதும் கணிதம் மீது ஏற்படுத்தும்.

3. *கணக்குகளை உருவாக்கச்சொல்லுங்கள்*
ஒருகணித வகுப்பில் கணக்கிற்கு தீர்வு மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றோம். ஏன் அவர்களை கணக்குகளை உருவாக்க வைக்கக்கூடாது? தினசரி வாழ்வில் இருக்கும் கணக்குகளை அவர்கள் உருவக்க வேண்டும்.
இதுகல்வியை அசைத்துப்பார்க்கும் முயற்சியும் கூட. நம் கல்வி யாரோ ஒருவர் சொல்ல அதற்கு ஏற்ப வேலை செய்யவே திட்டமிடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட Consumer Education நம் பிரச்சனைகளை நாம் பார்த்து அதற்கான தீர்வுகளை தொழில்நுட்பம் + அறிவியல் அனுபவங்களை பயன்படுத்துவதே இல்லை. ஆகவே பிரச்சனைகளையும் கணக்குகளையும் அவர்களே உருவாக்கட்டும்.

4. வகுப்பறை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு ஐந்து-பத்து நிமிடம் புத்தகத்தில் இல்லாத கணிதம் பற்றிய உரையாடலை முயற்சி செய்யலாம். புதிர்கள். கணித ஆளுமைகளைப் பற்றிய நிகழ்வுகள். கணித வரலாறு. எண்களின் வரலாறு. உலக அளவில் எப்படி கணிதம் வளர்ச்சி கண்டுள்ளது என பேச ஏராள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அட ஆறாவது வகுப்பு சதவிகிதம் பற்றி எடுக்க வேண்டும் அவ்வளவு தானே என்ற தொனியில் வகுப்பறைக்குள் சென்றால் அதே எனர்ஜியே வெளிப்படும். ஒவ்வொரு ஆசிரியருக்கு தனக்கான சவாலை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இன்று எப்படி புதிதாக கற்றுத்தரப்போகின்றேன், எதனை புதிதாக கற்கப்போகின்றோம் என்ற ஆவலுடனும் உற்சாகத்துடனும் வகுப்பிற்குள் நுழைய வேண்டும். சொன்னதையே திருப்பித்திருப்பி சொல்வதென்றால் அதற்கு ஒரு வீடியோ போதுமே. இன்னும் சிறப்பாக அது அந்த காரியத்தை செய்து முடிக்கும்.

5. *தொழில்நுட்ப பயன்பாடு*
இணையம், சமூக வலைத்தளங்கள் ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சியினை சரியாக பயன்படுத்தி தங்களுக்குள் ஒரு இணைப்பினை ஏற்படுத்தி வகுப்பறைகளில் செய்யும் முயற்சிகளை சக ஆசிரியர்களிடம் பகிர்வது, மேலும் முயற்சிகளை பெறுவது, அனுபவம் மூலம் மேலும் மாணவர்களை மகிழ்வூட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடலாம்.

இன்னும் இன்னும் நிறைய செய்யலாம்.

பேரன்புடன்,

விழியன்

படிச்சா படிங்க...! படிக்காட்டி போங்க...!


திரும்பும் திசையெல்லாம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளம்பர பதாகைகளும், சுவரொட்டிகளும் தான் தென்படுகின்றன.

காசுக்கு கலவி செய்யும் கூட்டமொன்று கல்வியின் தரம் பற்றி காணொளி ஊடக விளம்பரங்களில் நொடிக்கு நொடி அபச்சாரமாய் விபச்சாரம் செய்கின்றன.

எங்கள் பள்ளியில் அது இருக்கு...
எங்கள் கல்லூரியில் இது இருக்கு என்றும், மண்ணைப் பொன்னாக்கி உங்கள் குடிசையை கோபுரமாக்குவோம் என்றும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க அப்பாவிகளை நோக்கி கவர்ச்சித்தூண்டில்கள் வீசப்படுகின்றன.

மூன்று வயது குழந்தையின் மூளைக்குள் ஆறு வயது குழந்தையின் அறிவை, அறுவை சிகிச்சை செய்தாவது திணித்துவிட வேண்டும் என்ற அவசரமும், பேராசையும் கொண்ட பெற்றோர்களும்....

படிக்காமல் பட்டம் பெற்று, உழைக்காமல் உயர்ந்து விடத் துடிக்கும் இளைஞர்களின் கூட்டமும் இந்த கவர்ச்சித் தூண்டில்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிஉலகில் தங்களை கலியுக காமராசர்களாக காட்டிக்கொண்டு உள்ளுக்குள் கல்வியை காசாக்கிவிடத் துடிக்கும் கயவர்களிடம்....

கசாப்புக் கடை முதலாளிகளிடம் காசை வாங்கிக்கொண்டு கறிக்கு சினை ஆட்டைக் கூட விற்கும் மந்தையின் சொந்தக்காரனைப் போல் இந்த கல்வி வியாபாரச் சந்தையில் முதலாளிகளிடம் பெட்டிகளை வாங்கிக்கொண்டு நம் அடுத்த தலைமுறையை விற்றுக்கொண்டிருக்கின்றன பகட்டு விளம்பரங்களால் ஆட்சியை பிடித்த அரசுகள்.

# இதனால் பாதிக்கப்படப் போவது இளைஞர்களின் எதிர்காலம் மட்டுமல்ல...
இளைஞர்களின் எண்ணிக்கையை மட்டுமே பெரும் சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் எதிர்காலமும் தான் என்பதை அரசுகளும் நாமும் உணர்ந்து திருந்தாதவரை அழிவுப் பாதையில் நடைபோடும் கல்வியின் கால்களை தடுத்து நிறுத்த வழியேயில்லை....


ச.தாஸ்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் இன்னும் ஆயிரம் பிறை கண்டு கொண்டாட என் வாழ்த்துக்கள் !


25/6/17

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவிகளுக்கான வீர தீர செயல்களுக்கான "கல்பனா சாவ்லா" விருதுகள் - விண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் தயாரித்த உலகத்திலேயே மிக மிகச் சிறிய சாட்டிலைட்டை( 64 கிராம்) விண்ணில் செலுத்தியது நாசா

பாடத்திட்ட மாற்றம் பதிவு செய்ய ஜூலை 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பாடத்திட்ட மாற்றம் குறித்த பணிக்குப் பதிவு செய்ய ஜூலை 2 -ஆம் தேதி வரை கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கு பெற ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் -இல் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஊர்ழ் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் டங்ழ்ள்ர்ய் ஊர்ழ் பங்ஷ்ற் ஆர்ர்ந் ரழ்ண்ற்ண்ய்ஞ் என்ற படிவத்தில் தங்களது விவரங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பதிவுக்கான காலம் ஜூலை 2 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் நிதிஉதவி பெறும் அரசு பள்ளிகளில் "திருவள்ளுவர் வெண்கல சிலை" நிறுவ அறிவுறுத்தல் - சிலை விலை பட்டியல் - இயக்குனர் செயல்முறைகள்



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்
பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.


இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

750 தனி ஊதியம் 1.1.2011க்குபிறகு நிர்ணயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பதிலளிக்க மதுரை , திருச்சி மண்டல தணிக்கை அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம் ) அவர்களின் உத்தரவு !!!

தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகள் - ஆசிரியர்கள் குழப்பம்

தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல்
ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

இதில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பணி நாள்கள் 210 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆக., 5, செப்., 16, அக்., 7 ஆகிய 3 சனிக்கிழமைகளும், ஆண்டுத் தேர்வு முடிந்து ஏப்., 20, ஏப்., 23 முதல் ஏப்., 27, ஏப்., 30 ஆகிய 7 சனிக்கிழமைகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் கடந்த காலங்களில் பயிற்சிக்காக அளிக்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பும் ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

தொடக்க கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்கவில்லை. தேர்வுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் 24ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், ஜூலை 1ல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இதனால் சிரமப்படுகிறோம் என்றனர்.

SSLC RETOTAL RESULTS PUBLISHING-PRESS RELEASE

NEET 2017 RESULT PUBLISHED

"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!

கற்றல் என்பது உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். ஆனால், நமது கல்விச் சூழல், ஆசிரியர் கூறுவதை மாணவர்கள்
கேட்கும்விதமாவே உள்ளது. இது, ஒரு வழிப்பாதை போன்றது அல்லவா. மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகப் பள்ளிக்கூடம் இருந்தால்தான் மகிழ்ச்சியோடு கற்பார்கள்.

பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல; ஆசிரியர் எனும் வழிகாட்டியை, நண்பர்கள் எனும் பெரும் உறவைப் பெறும் இடமும்கூட. ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பதோடு, தோழமையுடன் நடந்துகொண்டால், பள்ளியைவிட இனிமையான இடம் வேறு என்ன இருக்கப்போகிறது? ஆனால், ஆயிரம் ஆசிரியர்களில் தோழமையோடு பழகும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான், மணிமாறன்.

 
அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.



அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.



ஒவ்வொரு மாணவருக்குள்ளும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கு. என் மீது புகார் சொல்லியும் கடிதங்கள் வந்திருக்கு. அந்த விஷயங்களில் என்னைச் சரிசெய்துகிட்டேன். மாணவர்களை இன்னும் நெருக்கமாக நேசிக்க, இந்தப் பெட்டி உதவுகிறது. எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ஆசிரியர் மணிமாறன்.