யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/17

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.


ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது.
எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து!

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக நேற்று (செப்டம்பர் 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, “ துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை புதிய ரயில்களை அறிமுகம் செய்யப்படும். சாத் பண்டிகைக்கு கொல்கத்தா, டெல்லி, மும்பை, சூரத், வதோதரா, அகமதாபாத், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நகரங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கடந்த ஆண்டு 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 4,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அனைத்து ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும், முக்கிய ரயில் நிலையங்களில் பந்தல்களை அமைக்கவும், கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பண்டிகை காலத்தில் ரயில் பயணங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக 1,654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 693 வழக்குகளில் ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ பக்கம் சாய்ந்த டிராய்: ஏர்டெல், ஐடியா, வோடபோன் அதிருப்தி!!

இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிக்கும் பிரச்சனையில் டிராய் ஜியோவை ஆதரித்துள்ளதால், போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா அதிருப்தியில் உள்ளன. 

இந்த இண்டர்கனக்ட் கட்டணத்தை அதிக அளவில் வசூலிப்பதாக ஜியோ ஏர்டெல் மீது புகார் தெரிவித்திருந்தது. மேலும், இண்டர்கனக்ட் கட்டணம் தேவையில்லை எனவும் கோரிக்கை வைத்தது.


லேண்டு லைன் - மொபைல் மற்றும் மொபைல் - லேண்டு லைன் அழைப்புகளுக்கு இண்டர்கனக்ட் கட்டணங்கள் ஏதும் இல்லை. அதேபோல் மொபைல் - மொபைல் அழைப்புகளுக்கும் இண்டர்கனக்ட் கட்டணங்கள் வேண்டியதில்லை என தெரிவித்தது.


இந்நிலையில், ஒரு அழைப்பைன் இணைக்க 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தெரிவித்துள்ளது.


மேலும், இந்த கட்டணத்தை தவிக்கபும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் மற்றும் சில போட்டி நிறுவனங்கள் அதிருப்தியில் உள்ளன.

Flash News : அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து செப்.30-க்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: அரசு தரப்பு உறுதி

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார்.
கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
எனினும் அரசுஊழியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு காட்டியது. மேலும் உடனடியாக பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயணா நீதிமன்றத்தில் கூறியதாவது:
   
அரசு பரிசீலிக்கிறது
அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன.
செப்.30க்குள் அறிக்கை
இது நிதி சார்ந்த விஷயம் என்பதால் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விஜய் நாராயணா கூறினார்.
   
இடைக்கால உத்தரவு
அப்போது, அறிக்கை தாக்கல் செய்து 2 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிடில் 20 சதவீத நிவாரணம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்த அரசு ஊழியர்கள் இந்த மாத இறுதி வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்.
   
5 மாத அவகாசம்
இதனிடயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 5 மாத கால அவகாசம் கோரியது தமிழக அரசு.

நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

நாட்டில் முதல் முறையாக ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகள் 40 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
மேலும் வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் தேசிய அளவில் பொதுத்தேர்வை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

JACTTO - GEO போராட்ட வழக்கும் நீதிமன்ற உத்தரவும் - முழு விவரம் :

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.
2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது
4. வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது
5. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்
6 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது .
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663 முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் .

ஆசிரியர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின் 1712 இடங்கள் மேலும் சேர்க்கப்பட்டு மொத்தம் நிரப்படும் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3375 ஆக கொண்டு வந்தது . இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்து பங்கேற்ற தேர்வானது மிக கடினமான போட்டி களமாக இருந்தது . ஜூலை 1 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது . தேர்வுக்கான முடிவு ஆகஸ்ட் 11 ஆம் நாள் வெளியிடப்பட்டது .41 நாளுக்குள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது,   எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29 சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது .

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் முறைப்படி சரிப்பார்க்கப்பட்டு , சீனியர், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு போன்ற பல்வேறு வெயிட்டேஜ் மதிபெண்களை கவனித்து அவர்களுக்கான மதிபெண்கள் ஒதுக்கீடு செய்து கடந்த 12 ஆம் நாள் பணிநியமனத்தில் நியமிக்கப்படுவோர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது .

இதற்கிடையில் 2315 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் தேர்வு பெற்றனர் எனபதால் மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தயராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மீதமுள்ள 1065 காலி பணியிடங்களுக்கான நியமனம் செய்ய கேட்டுகொண்டால் அதற்க்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார் ஆசிரிய தேர்வு வாரிய தலைவர் .

உண்மையில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் வேகம் மற்றும் தேர்வு நடத்தும் நாள் அத்துடன் விடைகள், கவுன்சிலிங் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடப்பதாக தேர்வர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

30/8/17

8, 9 & 10 th - SCIENCE DRAMA COMPETETION - GUIDELINES

ISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்

ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவியம், யோகா, கராத்தே கற்றுக் கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள்;
இத்தகைய பன்முகத் திறன்களை மாணவர்களிடம் வளர்க்க மாதந்தோறும் சொந்தப் பணத்தில் ரூ.20 ஆயிரம் செலவு செய்யும் தலைமை ஆசிரியர்…


கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள ஊராட்சிஒன்றிய தொடக்கப் பள்ளிதான் இத்தகைய சிறப்புகளோடு திகழ்கிறது. ஏராளமான மரங்கள், செடிகளுடன் இதமான சூழலில் பள்ளி வளாகம் பசுமையாகக் காட்சி அளிக்கிறது. 9 கம்ப்யூட்டர்களுடன் 2006-ல் தொடங்கப்பட்டகம்ப்யூட்டர் ஆய்வகத்தில் இப்போது 12 கம்ப்யூட்டர்கள் உள்ளன.

பாடத் திட்டத்தோடு தொடர்புடைய விளையாட்டுகளைக் கொண்ட ஏராளமான செயலிகளை (Apps) மாணவர்களே டேப்லெட் கருவி மூலம் கையாளுகின்றனர். புரொஜக்டர், ஹோம் தியேட்டர் வசதிகள் கொண்ட மல்டி மீடியா டிஜிட்டல் வகுப்பறை 2012-ல் உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. மையக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, எல்லா வகுப்பறைகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தடையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 3 கிலோவாட் திறன் கொண்ட இன்வெர்ட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது.

மாணவர்களின் வீட்டுப் பாடம் உட்பட பெற்றோர்களுக்கு தினமும் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் குரல் வழிச் செய்தியாக (Voice message) பெற்றோர்களின் செல்போன்களுக்கு அனுப்பப்படுகின்றன. காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய குரல் வழி தகவலை அவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் உடனே அனுப்பி விடுகிறார்.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. வண்ணப்படங்களுடன் கூடிய சுவரோவியங்கள், மின் விசிறிகள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரை, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் போன்ற வசதிகள் அனைத்து வகுப்பறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கீ போர்டு வாசிக்க பயிற்சி பெறும் மாணவர்கள்.நடனம் பயிலும் மாணவர்களுக்கு கிராமிய நடனமும், மேற்கத்திய நடனமும் கற்றுத் தரப்படுகின்றன.

இசைவகுப்பில் சேர்ந்துள்ளவர்களுக்கு கீ போர்டு இசைக்கவும், வாய்ப்பாட்டு பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் மைசூரில்தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த லோ.மஹா, என்.ரிதேஷ் ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். கேரம், செஸ் மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

செயல்வழிக் கற்றல் முறையினை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டு மாவட்ட அளவில்சிறந்த கணினி வழிக் கற்றல் மையத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. அடிப்படை வசதிகள் மட்டுமின்றி நவீன தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்து விளங்கும் இந்தப் பள்ளிக்கு 2015-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.

இத்தகைய பல சிறப்புகளோடு வளர்ந்து வரும் இந்தப் பள்ளிக்கு மேலும் இடவசதி தேவைப்படுவதை உணர்ந்த ஊர் பொதுமக்கள், 2015-ம் ஆண்டில் ரூ.7 லட்சம் மதிப்புடைய 5 சென்ட் நிலத்தை வாங்கி பள்ளிக்கு கொடுத்துள்ளனர்.“இவை மட்டுமல்ல; பள்ளிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை கிராம மக்கள் வழங்கி வருகின்றனர்.

இதற்காகவே 2014 முதல் ஆண்டு தோறும் கல்விச் சீர் வழங்கும் விழாவை ஊர் மக்கள் நடத்துகிறார்கள். இவ்வாறு இதுவரை ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை வழங்கியுள்ளனர்” என தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:“2005-ம் ஆண்டு இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். அப்போது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லை. அந்த ஆண்டிலேயே சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடு செய்தேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அணுகி 5 கம்ப்யூட்டர்கள் பெற்றோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கியவை உட்பட 9 கம்ப்யூட்டர்களுடன் கூடிய ஆய்வகத்தை அமைத்தோம். அரசு தொடக்கப் பள்ளியில் 2006-ம் ஆண்டிலேயே இப்படி ஒரு கம்ப்யூட்டர் ஆய்வகத்தை அமைத்தது பரவலான கவனத்தை பெற்றது.

பல்வேறு தரப்பிலிருந்து எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளால் உற்சாகம் அடைந்த நானும், பள்ளி ஆசிரியர்களும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறோம்” என்று உற்சாகமாகப் பேசினார்.இந்த தொடக்கப் பள்ளியில் நடப்பாண்டில் மொத்தம் 190 மாணவர்கள் பயில்கிறார்கள்.

“எங்கள் ஒன்றியத்தில் மொத்தம் 106 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே, அதாவது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலே மாணவர்கள்உள்ளனர். இத்தகைய சூழலில் 190 மாணவர்கள் பயில்வதே இந்தப் பள்ளியின் சிறப்பை பறைசாற்ற போதுமானது” என்கின்றனர் ஆசிரியர்கள்.ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களின் கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக செயல்படுகிறது. பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஆசிரியர்கள் உரிய மதிப்பளித்து உடனுக்குடன் நிறைவேற்றுவதால், ஆசிரியர்கள் – பெற்றோர்கள் இடையே வலுவான பிணைப்பு நிலவுகிறது.

தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 4 தற்காலிக ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கான ஊதியத்தை ஊர் மக்கள் தருவதாகவும், மற்ற 3 பேருக்கான ஊதியத்தை தானே கொடுத்து வருவதாகவும் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் தெரிவிக்கிறார்.

மேலும் ஆங்கில உரையாடல், இந்தி, இசை, நடனம் ஆகிய பயிற்சிகளை அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கும் தன் சொந்தப் பணத்தில் இருந்தேஊதியம் தருவதாகவும், இதற்காக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்வதாகவும் தலைமை ஆசிரியர் கூறுகிறார்.இத்தகைய உயர்ந்த நோக்கம் கொண்ட ஆசிரியர்கள் பணியாற்றுவதால்தான் க.பரமத்தியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு 10 கி.மீ. தொலைவில் இருந்து கூட சுமார் 60 மாணவர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

வெளியூர்க்கார்கள் சுமார் 20 பேர் க.பரமத்தியில் வாடகை வீட்டில் குடியேறி, தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில்சேர்த்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து க.பரமத்தியில் உள்ள இந்த அரசு தொடக்கப் பள்ளி ஓர் ஆச்சரியப் பள்ளி என்பது உறுதியாகியுள்ளது.

விடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்: ஆறு, குளம், ஏரி அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் - மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்

விடுமுறை நாட்களில் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி
இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தொடர்மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் கல்வி அதிகாரிகளும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்தும் பொருட்டு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

* தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரம் வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் யாரும் அருகே செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* மழையின் காரணமாக பள்ளியில் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அத்தகைய வகுப்பறைகளைப் பயன்படுத்தாமல் பூட்டிவைப்பதுடன் அதன் அருகே மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மின்இணைப்பு துண்டிப்பு

* மின்இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின்கசிவு, மின்சுற்று கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின்இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவிடலாம். அதோடு மின்வாரிய பொறியாளருக்கு தகவல் தெரிவித்து பழுதுகளைச் சரிசெய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தின் அருகில் நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்த வெளி கிணறுகள் மற்றும் பள்ளியில் உள்ள கழிவுநீர்த்தொட்டிகள் இருந்தால் அவற்றை மூடப்பட்டுள்ள நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* விடுமுறை நாட்களில் ஆழ மான ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

* மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விடுமுறை நாட்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுரை அளிக்க வேண்டும்.

* பள்ளியை விட்டுச்செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடுவதோ அல்லது அதன் அருகில் செல்லவோ கூடாது என மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

அறுந்த மின்கம்பிகள்

* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தாலும் அதேபோல், அறுந்து தொங்கக்கூடிய நிலையில் மின்கம்பிகள் இரு்நதாலும் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

* சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வுசெய்வதுடன் மாணவர்களைக் கொண்டு எந்த மின்சாதனங்களையும் இயக்கக் கூடாது.

இடி, மின்னல்


* மழைக்காலங்களில் மழை யில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக்கூடாது என்றும் அதுபோன்று ஒதுங்கினால் இடி, மின்னல் போன்றவற்றால் ஆபத்து நேரிடலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை
நடத்துகின்றனர்.

அரசுஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அமைப்பு, செப்., ௭ முதல், தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுத்திருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், போராட்டம் நடத்தினால், அரசு தரப்பில் யாரும் பேச்சு நடத்த முன்வர மாட்டார்கள் என, தெரிகிறது. அதனால், போராட்டத்தை நடத்தலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்ற குழப்பம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜாக்டோ - ஜியோ அமைப் பினர், இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்; சங்க நிர்வாகிகளிடம், இதுகுறித்து கருத்து கேட்கப்படுகிறது. அதன்பின், தொடர் வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என, ஆசிரியர், ஊழியர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர்-2017 பள்ளி நாட்காட்டி..

No automatic alt text available.

Last date extended to 30.09.2017 for online applications under the Pre / Post Matric Scholarship

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதி.


முதுகலை ஆசிரியர்கள் தற்போது நடைபெறும் (28.08.2017 முதல்) சான்றிதழ் சரிபார்ப்பில் நீதிமன்ற உத்தரவின் படி "சேலம் விநாயகா மிஷன்" பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் கலந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதிஅளித்துள்ளது.
பணிநியமனம் நீதிமன்ற இறுதி தீர்புக்கு உட்பட்டது.

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி
உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.




ஒருமாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.


குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.


மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.


இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.


இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.


கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:


பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.



இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.

EMIS: DOWNLOAD OFFICIAL- EMIS STUDENT NEW DATA SHEET

FLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - அரசுக்கு பரிந்துரை

*நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக 
செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS