வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்
புதன்கிழமை (நவ.1) முதல் ரூ.93.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்போது இதன் விலை ரூ.750-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்வோருக்கு ரூ.750-க்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.479.11-லிருந்து ரூ.483.69-ஆக, அதாவது ரூ.4.58 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு?
வீட்டு உபயோகத்துக்கு மானியம் அல்லாத சிலிண்டரை புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்து ரூ.750-க்கு வாங்கும் நுகர்வோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.266.31 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.