யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/17

BIG BREAKING NEWS-2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

BIG BREAKING NEWS

2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலைஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான
செய்தி



1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்தபோராட்டத்தில் அரசு எழுதி கொடுத்த உத்திரவாதPROCEEDINGS கடிதத்தை தாண்டி எதுவும்செய்யக்கூடாது
(ஊதியமுரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைசெய்யப்படும்)

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது

DEE PROCEEDINGS- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தல்- திருத்தம் வெளியிடுதல் சார்பு

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' 
என, பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரைநடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன. திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி,நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன.அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்குகளுக்கும், எந்ததொடர்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு

சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீட்டுக்கான முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
இதற்கான உத்தரவை பிறப்பித்து மத்திய அரசு நேற்று முன்தினம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதிலும் மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது விலைக்கு வாங்குவதற்கோ ‘HBA (House Building Advance)’ எனப்படும் முன்தொகை, கடனாக அளிக்கப்பட்டு வருகிறது. இது ரூ.7.50 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த முன்தொகை பெறுவதற்கு ரூ.30 லட்சமாக இருந்த சொந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்தொகை கடனுக்கு 9.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இந்த வட்டிவிகிதம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவி இருவரும் மத்திய அரசுப் பணியாளர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டும் கடன் அளிக்கப்பட்டு வந்தது. இதை சற்று தளர்த்தி இருவரில் ஒருவர் பெயரில் அல்லது இருவரது பெயரிலும் கடன் வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சொந்த வீட்டுக்காக ரூ.1 கோடி வரை செலவு செய்யும் பணியாளர்கள், முன்தொகையான ரூ.25 லட்சம் அன்றி வங்கியிலும் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் தங்கள் வீடுகளின் பத்திரங்களை அடமானமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் 'தி இந்து' விடம் கூறும்போது, ''மத்திய அரசுப் பணியாளர்கள் சொந்தமாக வீடு வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் அரசிடம் பெறும் கடனுக்கான தவணைத் தொகை, தனியார் வங்கிகளை விடக் குறைவு என்பதே அதற்கானக் காரணம்.சொந்த வீடு வாங்குவதற்கான முன்தொகை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தது. எனவே தற்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்றபடி உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அதை விரிவுபடுத்த அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 34 மடங்கு அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடனாக அளிக்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதில் வீடுகட்ட அதன் விலையில் 80 சதவீதம் வரை முன்தொகை அளிக்கப்படுகிறது. இதில் கட்டப்படும் வீடு கிராமப்புறத்தில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம் அதிகரிப்பு!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும்பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது
அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

TN 7th PAY - ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம் - அரசு அறிவிப்பு.

Letter No.57907 Dt: November 13, 2017 Tamil Nadu Revised Pay Rules, 2017 – Fixation of Pay with reference to Tamil Nadu Revised Pay Rules, 2017 - Certain clarification – Regarding

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு.

கற்றல் விளைவுகள் பயிற்சி அட்டவணை!!!

உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் :

தமிழ் & ஆங்கிலம் : நவம்பர் 15 & 16


அறிவியல் & கணக்கு : நவம்பர் 20 & 21

சமூக அறிவியல் : நவம்பர் 22 &23


தொடக்கநிலைஆசிரியர்கள்:

50% : நவம்பர் 22 முதல் 25 வரை


50% : நவம்பர் 27 முதல் 30 வரை

சி.பி.எஸ்.இ., அவகாசம்!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.
இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

அறிவியல் கண்காட்சி முடிவு குறித்து மழுப்பல்!ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தி!!!

மதுரை;மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு நடந்த அறிவியல் கண்காட்சி போட்டிகளின்
முடிவுகள் அறிவிப்பில் சர்ச்சை எழுந்துள்ளது.அறிவியல் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த ஆண்டுதோறும் இக்கண்காட்சி நடத்தப்படும்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். இந்தாண்டு 'நிலையான வளர்ச்சியில் அறிவியலின் பங்கு' என்ற தலைப்பில் கண்காட்சி நடந்தன.குறுவள மையம் அளவில் நடந்த கண்காட்சியில் தலா 10 முதல் 15 துவக்க, நடுநிலைப் பள்ளிகள் படைப்புக்களை காட்சிப்படுத்தின.

இதில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி அறிவியல் பாட ஆசிரியர் நடுவர்களாக இருந்து முதல் 3 பரிசுக்கான பள்ளிகளை தேர்வு செய்து அறிவித்தனர்.இதன்படி துவக்க
பள்ளிகளுக்கு முதல் பரிசு 400 ரூபாய், இரண்டாவது 300, மூன்றாம் பரிசாக 200 ரூபாயும், உயர் மற்றும் நடுநிலைக்கு முதல் பரிசு 600, இரண்டாவது 500, மூன்றாம் பரிசாக 400
ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் 16ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நடுவர்கள் தேர்வு செய்ததிலும், பள்ளிகள் பங்கேற்க வைத்ததிலும் பல ஒன்றியங்களில்
குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: நடுவர்களாக பங்கேற்ற ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளே பல இடங்களில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறுவள மையத்திலும் நடுநிலை பள்ளிக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் காத்திருந்தன.
ஆனால் 2 அல்லது 3 நடுநிலை பள்ளிகளே பங்கேற்றன. வேறு வழியின்றி மூன்று பரிசுகளும் பங்கேற்ற பள்ளிகளுக்கே வழங்க நேர்ந்தது.மேலும் ஒவ்வொரு மையங்களுக்கும் நடுநிலை பள்ளிகளை பிரித்து அனுப்புவதில் கல்வி அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை.
ஒன்றியம் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால் அதிக பள்ளிகள் பங்கேற்றிருக்கும். பரிசு வழங்கும்போது தான் இப்பிரச்னையே வெளியானது, என்றனர்.

EMIS - Browser Problem Solution!!!

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் 
போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும்..


இது சில ப்ரௌசர்களில் அப்டேட் ஆவதாக நமக்கு சென்ற வாரம்  மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS)  சார்பாக நடந்த காணொலி காட்சியில் தகவல் தந்தனர்.. அந்த ப்ரௌசர் விபரங்கள் கீழே.....

Download link for Mozila firefox - Developer Edition

Mozila Firefox  - Developer Edititon



Internet Explorer - Edge Browser

இதில் ஏதாவது ஒரு ப்ரௌசரை நிறுவிய பின் அட்மிட் செய்து பார்க்கவும் ..முதல் தடவை அட்மிட் ஆகாது, ஆனால் இரண்டாவது, மூன்றாவது முயற்சியில் கண்டிப்பாக அட்மிட் ஆகும்..

 அதன் பின் தடங்கலின்றி அந்த கணினியில் தொடர்ந்து அட்மிட் செய்யலாம்... அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விடும்...

100 இடங்களில் நுழைவு தேர்வு இலவச பயிற்சி : முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை: சென்னை உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான
, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன. முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.


மத்திய அரசின், 'நீட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை : முதற்கட்டமாக, சென்னை உட்பட, 100 இடங்களில், இந்த பயிற்சி துவக்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 25 இடங்களில் பயிற்சியை துவங்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பொது தேர்வில் தரப்பட்டியல் ஒழிப்பு, எஸ்.எம்.எஸ்., வழியே தேர்வு முடிவு அறிவித்தல், பிளஸ் 1க்கு பொது தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 2,373 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புதல் என, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.
இந்த பயிற்சி திட்டத்தில், 73 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். சனி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, பயிற்சி நடக்கும்.
தேர்வு விடுமுறை மற்றும் பொது தேர்வு விடுமுறையில், தினமும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மொத்தம், 30 புத்தகங்கள் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்பு : இந்த பயிற்சிக்கு, 'ஸ்பீட் அகாடமி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. முதலில், 100 மையங்கள் திறக்கப்படுகின்றன; பின், கூடுதலாக, 312 மையங்கள் திறக்கப்படும்.
நாங்கள் தரும் இலவச பயிற்சியை பெற்று, நீங்களும் முயற்சித்து, மத்திய அரசின் எந்த தேர்வானாலும், அதில், தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார்.

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''மத்திய அரசு எத்தனை நுழைவு தேர்வுகளை நடத்தினாலும், அதை தகர்த்தெறிந்து, தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், இந்த திட்டத்தில் பயிற்சிஅளிக்கப்படும்.''வகுப்பில் மட்டுமல்ல, வீட்டிலும் பயிற்சி பெறும் வண்ணம், பயிற்சி வகுப்புகள் அடங்கிய, சி..,யும், மாணவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பல்வேறு துறை அமைச்சர்கள், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், மாணவியர் பங்கேற்றனர்.

'ஜெட் வேகத்தில் கல்வித்துறை' - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
பேசுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், தற்போதைய போட்டி தேர்வு பயிற்சியும், மாணவர்களை முன்னேற்றும்.

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஜெட் வேகத்தில், துறையில் வளர்ச்சி
பணிகளை மேற்கொண்டு வருகிறார்,'' என்றார்.

14/11/17

TNPSC: VAO& GROUP IV Notification and Exam Date & Apply Last Date Deatils Announced

டெட்’ முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி !

பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியராக பணிபுரிவோர் குறித்த தகவல்களை திரட்டுமாறு, இயக்குனர் கார்மேகம், தொடக்க கல்வி
அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஆசிரியர் கல்விக்குழும ஆணைப்படி, ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர், மேல்நிலை வகுப்பில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆசிரியர் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதேபோல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க, இளங்கலை கல்வியியல் படிப்புடன், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு, ஆசிரியர் தகுதித்தேர்விலும்(டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2010 ஆகஸ்டில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011 ன் படி, மத்திய அரசு உத்தரவு ஏற்கப்பட்டது. எனவே, பள்ளிகளில் பணிபுரிய, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது.

ஆனால், அரசு வேலை பெற மட்டுமே, டெட் தேர்வு எழுத வேண்டுமென்ற, தவறான புரிதல் உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை போல, சுயநிதி பள்ளிகளிலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே, பணியில் அமர்த்த வேண்டுமென, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்யுமாறு, தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’டெட் தேர்வில் தேர்ச்சி பெற, 2019 வரை கால அவகாசம் உள்ளது. இதற்குள், ஆசிரியர் பணிக்கான அனைத்து குறைந்தபட்ச தகுதிகளையும், பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சுயநிதி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.


புதிதாக பணியில் சேர்ந்தோர், கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். எனவே, அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும், ஆசிரியர்களின் கல்வித்தகுதி விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என்றனர்.

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்!!!

பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால்
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். 'தொடக்க கல்வி துறையில் உள்ளது போல், உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும்,' என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நிர்ணயம், சம்பளம் உயர்வு, அரசு நிதி செலவிடல், ஆசிரியர் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன் ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட அனைத்து வகை வரவு செலவினங்களுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து பள்ளி தணிக்கை துறை சார்பில் தணிக்கை செய்யப்படுகின்றன.

இதற்காக சென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 32 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆடிட் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மண்டல கணக்கு அலுவலராக உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கீழ் கல்வித்துறையின் கண்காணிப்பாளர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தணிக்கையின் போது பள்ளிகளில் வரவு செலவிற்கான உரிய ரசீது இல்லாதது, விதி மீறி ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கல், நிதி முறைகேடு இருந்தால் ஆட்சேபனை (அப்ஜெக்ஷன்) தெரிவிக்கப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அவை சரிசெய்யப்பட்டால் தான் எந்த பணப் பலனையும் ஆசிரியர், அலுவலர்கள் பெற முடியும்.

தற்போது வரை தமிழக பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் நிலுவையில் உள்ளன. இவற்றை குறைக்க அவ்வப்போது கூட்டு அமர்வு கூட்டங்கள், சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் மாதத்தில் குறிப்பிட்ட பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். இங்கு தான் பல அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' கோலோச்சுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் 'ஆடிட்' என்றால் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். ஆடிட் வருவோருக்கு லாட்ஜில் தங்குவது, சாப்பாடு, தணிக்கை முடிந்து செல்லும்போது 'கவர்' என சகலமும் பள்ளி சார்பில் 'கவனித்து' அனுப்பினால் தான் ஆட்சேபனைகளுக்கு விமோசனம் கிடைக்கும்.

ஆனால் 'கவனிப்பு' இல்லாவிட்டால் 'அது சரியில்லை... இது சரியில்லை...,' என ஏராளமான ஆட்சேபனைகள் தெரிவித்து எழுதிவிடுவர். இதனால் முடிந்தவரை 'கவனித்து' அனுப்பி விடுவோம். இதில் உதவி பெறும் பள்ளிகளில் இஷ்டத்திற்கும் வசூலிப்பு நடக்கும். இதுதவிர ஓய்வு பெறும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதி பலன் கிடைக்க இத்துறையின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) அவசியம்.

அப்போதும் முடிந்த அளவு 'பணம் கறப்பு' நடக்கும்.பல்வேறு புகார்கள் தெரிவித்தும், இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால் இத்துறைக்கு 'டிரான்ஸ்பர்' ஆவதில் கடும் போட்டி ஏற்படுகிறது. முறைகேடு புகாரில் சிக்கி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் சிபாரிசால் இத்துறைக்கே பணிக்கு திரும்பும் சம்பவங்களும் நடக்கிறது. இத்துறையை சீரமைத்து மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.


தொடக்க கல்விமுறை பின்பற்றப்படுமா


தொடக்கக் கல்வித்துறையில் பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு அந்தந்த மாவட்டங்களில் தொடக்க கல்வி அலுவலர் கண்காணிப்பின் கீழ் உதவி தொடக்க கல்வி அலுவலர் பொறுப்பிலேயே தணிக்கை பணிகள் மேற்கொள்கின்றன. அதுபோல் உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் கண்காணிப்பாளர்களே தணிக்கை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கலாம். உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளை அத்துறைக்கே திருப்பி அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

டாக்டர்களின் சம்பள முரண்பாடு : அரசுடன் நாளை பேச்சுவார்த்தை

சேலம்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக
அரசு டாக்டர் சங்கங்களுடன் நாளை பேச்சு நடத்துகிறார்.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: மருத்துவ படிப்பை முடித்து, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களாக பணியில் இணைபவர்கள், முதல் நான்கு ஆண்டுகள் வரை, 56 ஆயிரத்து, 100 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் பணி செய்கின்றனர்.
அதன்பின்னரே, மத்திய, மாநில அரசு டாக்டர்களின் சம்பளத்தில், முரண்பாடு துவங்குகிறது.

ஐந்து முதல், 10வது ஆண்டு வரை, மாநில அரசு டாக்டர்களை விட, மத்திய அரசு டாக்டர்களின் சம்பளத்தில், மாதத்துக்கு, 5,000 ரூபாய் கூடுதல் என்ற வகையில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். அதே பணியில், 13 முதல், 20 ஆண்டுகள் முடிக்கும் நிலையில், மாநில டாக்டர்களை விட மத்திய அரசு டாக்டர்கள், மாதத்துக்கு, 39 முதல், 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு ஐந்து முதல், ஏழு லட்சம் ரூபாய் வரை, கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., முடித்து, பணியில் உள்ள டாக்டர்களின் சம்பள முரண்பாடு இதுவென்றால், எம்.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்பு டாக்டர்களின் சம்பள விகித முரண்பாடுகள் இதைவிட அதிகமாக உள்ளன. தமிழக அரசு டாக்டர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக, பிறப்பித்த அரசாணை எண், 354ல் உள்ள சில கருத்துக்களை முன் வைத்து, நாளை சென்னையில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், டாக்டர்கள் சங்கங்களை பேச்சுக்கு அழைத்துள்ளார். இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் குறித்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான
அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.


இனிவரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

ஏழை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன் திட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு 
மனுவில் கூறியிருந்ததாவது:&
 பெருமாநல்லூரை சேர்ந்த ஏ.ரவி என்பவர் தன் மகனுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது மகன், பிளஸ்&2&வில் 59 சதவீத மதிப்பெண்தான் எடுத்துள்ளார். ஆனால், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். இதனால் அவரது மகனின் விண்ணப்பத்தை நிராகரித்தோம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்  ரவியின் மகனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று 2013&ம் ஆண்டு ஜூன் 20&ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:&
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் விதமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடனை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த கல்விக்கடன் என்பது இலவசமாக வழங்கப்படுவதில்லை. குறைந்த வட்டியில் திருப்பிச் செலுத்தும் விதமாக கடன் வழங்கப்படுகிறது. இது, சமுதாயத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் விதமாக செயல்படும் சமூக பொறுப்புள்ள திட்டமாகும். 

இந்த திட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக, நியாயமான கல்விக்கட்டணத் தொகையை கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது.
கல்விக்கடன் எந்தெந்த மாணவர்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து 2012&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27&ந் தேதி மத்திய நிதி மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்து, அந்த  தகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளில், கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, இவற்றின் அடிப்படையில், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு குறையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இந்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
எதிர்மனுதாரர் ஏ.ரவியின் மகனுக்கு 2 வாரத்துக்குள் கல்விக்கடன் வழங்கும்படி வங்கியின் மேலாளருக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.