ஈரோடு மாவட்டம் SSA (SARVA SHIKSHA ABHIYAN)-ல் Data Entry Operator பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணி: மாவட்ட அலுவலக கணினி விவரப் பதிவாளர்
( District Project Office – Data Entry Operator)
காலியிடங்கள்: 1
சம்பளம்: 10,000
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் LOWER GRADE மற்றும் MS-Office-ல் 3 மாத Certificate Course முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2. பணி: வட்டார அளவில் கணினி விவரப் பதிவாளர்
(Block Resource Centre – Data Entry Operator)
காலியிடங்கள்: 18
சம்பளம்: 8,400
கல்வித்தகுதி: +2 முடித்து தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் LOWER GRADE மற்றும் MS-Office-ல் 3 மாத Certificate Course முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.erode.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட திட்ட ஒருங்கிணைய்ப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,
மாவட்ட திட்ட அலுவலகம்,
அனைவருக்கும் கல்வி இயக்கம்,
அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகம்,
பன்னீர் செல்வம் பூங்கா,
ஈரோடு – 638001
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.2.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.erode.tn.nic.in/ssa/SSA_DEO_applicationForm.pdf