யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/2/18

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு!!!

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர்
எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்துக்கான கூடுதல் கட்டடம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.97.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என மொத்தம் ரூ.149.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான 
கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்குக் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து ஜனவரி 23ஆம் தேதி அன்று சிஐடியு மற்றும் பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டன. இதனையடுத்து ஜனவரி 22ஆம் தேதியன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர்நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்ட இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து சிஐடியு உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதனால், பெரிதளவில் அரசுப்பணிகள் பாதிக்கப்படவில்லை என்றாலும் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில், தற்போது 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 22ஆம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை கட்!!!

தோட்டக்கலை பதவிக்கான TNPSC தேர்வு ரத்து!!!

பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது!!!

வெளியானது குரூப்2 நேர்காணல் தேர்வு இறுதி முடிவு!!!

10,+2.வகுப்பில் கேள்விகள் குறைப்பு!!!

அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு-ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!!!

அண்ணா பல்கலை"யில் பட்டதாரிகளுக்கு வேலை!!!

Power Gridல் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!!!

RTE சட்டப்படி ஆண்டு முழுவதும் BLO election duty செய்ய வழிவகை உள்ளதா?

கள ஆய்வில் ஈடுபடும் பெண் ஆசிரியர்கள் தங்கள் பணி
முடித்து செல்ல இரவு ஆகிவிடுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிறது.*

*✍BLO பணி , ஆசிரியர் பணி , வீட்டில் உள்ள பணிகள் இம்மூன்றும் ஒரு சேர இணைந்து ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து அடுத்த நாள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய பாடங்கள் திட்டமிடுதல் பணி பாதிக்கப்படுவதுடன்...*

*✍கற்றல் இருந்தால் கற்பித்தல் பணி சிறக்கும் என்பார்கள் ..*....

*✍இங்கு திட்டமிடவே நேரம் இல்லை என்கிற பொழுது ஆசிரியர்களுக்கு புதிய வகைகளை கற்க ஏது நேரம்....*

*✍13 வகை பணியாளர்கள் BLO பணிக்கு உட்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை தந்துள்ளது....*

1. சத்துணவு அமைப்பாளர்
2. தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள்
3. கிராம நிர்வாக அலுவலர்
4. ஊராட்சி செயலாளர்
5. மின் கணக்கீடு செய்பவர்
6 அஞ்சலக ஊழியர்
7. துணை செவிலியர் & பேறு கால உதவியாளர்
8. சுகாதார பணியாளர்கள்
9. மதிய உணவு பணியாளர்
10. மாநாகராட்சி தண்டர்
11. கிராம பணியாளர்கள்
12. மேல்நிலை/ கீழ்நிலை எழுத்தர்
13. ஆசிரியர்கள்

*✍ஆனால் மேற்கண்ட பட்டியலில் ஆசிரியர்களை மட்டுமே இந்த மாவட்டத்தில் பயன்படுத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம்..*..

*✍தென் மாவட்டங்கள் முழுவதும் கல்வி நலன் பாதிக்கப்படாதவாறு....அம்மாவட்டங்களில் ஆசிரியர்களை தவிர்த்து ஏனையினோர்க்கு இப்பணியினை வழங்கி , அம்மாவட்டங்களின் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை காத்துள்ளனர்...*..

வன அதிகாரி பணிக்கு UPSC தேர்வு அறிவிப்பு!!!

24 ல் TNPSC தேர்வு-ஏற்பாடுகள் தீவிரம்!!!

அரசு உதவித் தொகை மீண்டும் தபால்துறை மூலம் வழங்க நடவடிக்கை!!!

தவறான தகவல் வதந்தி செய்தியை நம்ப வேண்டாம் ஏர்செல் நிறுவனம் அறிவிப்பு​!!!

BRTE'S Seniority List-22.12.2017

அரசுப் பள்ளிக்கு வேன் வழங்கிய கிராம மக்கள்!!!

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி
மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க இளைஞர்கள் , கிராம மக்கள் ஒன்றிணைந்து வேன் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் பல துறைகளிலும் சாதித்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதோடு மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்றுவருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் அக்கிராம மக்களும், முன்னாள் மாணவர்களும் ஒன்றிணைந்து பள்ளி மாணவர்களுக்கு வேன் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்கள், வேன் மூலம் சென்றுவருவதை அரசுப் பள்ளி மாணவர்கள் ஏக்கத்துடன் பார்க்கின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவரவும் அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்தவும் திட்டமிட்டு முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து வேனை இலவசமாக வழங்கியுள்ளனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரனிடம் பொதுமக்கள் வேன் சாவியை வழங்கினர். அவர் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திராவிடம் சாவியை வழங்கினார்.

ஒவ்வொரு நாளும் 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து மாணவர்களும் வேனில் வந்துசெல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கென தனி ஓட்டுநர் நியமிக்கப்பட்டு அவருக்கான சம்பளத்தையும் டீசலையும் கிராம மக்களே வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரா, “ மாணவர்கள் மீது இளைஞர்களும், கிராம மக்களும் அதிக அக்கறையும் அன்பையும் கொண்டு பல உதவிகளைச் செய்துவருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறைந்துள்ளது. அவர்கள் மேலும் மேலும் சாதனை படைத்துவருகின்றனர் “ என்று கூறினார்.

இதற்கு முன்பு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கல்விக்காகவும் பள்ளிக்குக் கணினி வாங்கிக் கொடுத்து, கணினிக்குச் சிறப்பு ஆசிரியர், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் என மூன்று ஆசிரியர்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்துள்ளனர்.

இது தவிர 5ஆம் வகுப்பு வரை 19 சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்கள் எளிதாகப் பள்ளிக்கு சென்றுவர சைக்கிள்களையும் வழங்கியுள்ளனர்.

அரசின் உதவியை எதிர்பார்க்காமல், இந்தப் பள்ளியை தனியாருக்கு இணையாகத் தரம் உயர்த்திவருகின்றனர் அக்கிராம மக்கள்

நம்ம போன் நம்பர் மாறாது!

சிறிது நேரத்தில் அனைவரையும் கவலைக்குட்படுத்திய 13 இலக்க 
செல்போன் எண்கள் அறிமுகம் என்ற செய்தி தவறானது எனத் தெரிவ்யவந்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் மொபைலில் இருந்து மொபைலுக்கு (M2M) தானியங்கி மூலம் செய்திகளைப் பரிமாறும் எண்கள் 13 இலக்கமாக மாற்றப்படும் எனத் தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. அதனால், 10 இலக்க எண்கள் கொண்டவர்களுக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை.

எம்2எம் எண்கள் என்பவை ஸ்வைப் இயந்திரங்கள், கார்கள், மின்சார மீட்டர் ஆகியவற்றிற்கான சிம் கார்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இதை இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ , டெலிகாம் தொழில்துறை ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன. எம்2எம் சிம் எண்கள் மாறும்போது அது எந்த வகையிலும் செல்போன் எண்களைப் பாதிக்காது என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த 13 இலக்க எண் மாற்றம் என்பது எம்2எம் தொடர்புக்குத்தான் என்று இந்த மாத ஆரம்பத்தில் தொலைத்தொடர்புத் துறை தொலைபேசி நிறுவனங்களுக்குத் தெரிவித்திருந்தது.

இது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ”வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 13 இலக்க எண்கள் அறிமுகம் செய்யப்படும். அக்டோபர் 1ஆம் தேதி எம்2எம்மின் அனைத்து எண்களும் 13 இலக்கமாக மாற்றப்படும். இந்தப் பணி டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும்” என்று கூறின.

எம்2எம் என்பது வெவ்வேறு இடங்களில் இருந்து வயர்லஸ் மூலம் பேசும்போது உதவுகிறது. போக்குவரத்து மேலாண்மைத் தீர்வு, வாகனத் தணிக்கை, மின்சார மீட்டர்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு இந்த எண் சேவையை ஒதுக்குவதாகக் கூறப்படுகிறது.

எம்2எம் என்றால் என்ன?

இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்கள் மூலம் தகவல் பரிமாறிக்கொள்வது. இந்தச் சாதனங்களை இணையத்துடன் இணைக்க M2M சிம் கார்டு அவசியமாகிறது. இதனை வழக்கமான மொபைல்களிலும் பயன்படுத்தலாம்.

21/2/18

தமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை... பணிகளை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் தலைமையில் குழு!

சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவுகளை குறைக்கும் வகையில் எந்தெந்த பணிகளை நீக்கலாம் என்று குழு கண்டறிந்து அறிக்கை அளிக்கும். தனியார் நிறுவனம் மூலம் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பதையெல்லாமும் ஆய்வு செய்ய குழுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவுட்சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும். அரசுப் பணியாளர்களுக்காக செலவுசெய்யப்படும் தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

தேவையற்ற அரசு பணியிடங்களை குறைக்க குழு அமைப்பு

                                                 

சென்னை: தேவையற்ற அரசு பணியிடங்களை கண்டறிந்து குறைப்பது குறித்து பரிந்துரைக்க அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக அரசு பணியிடங்களில் தேவையற்றது என்னென்ன என்பதை கண்டறிய குழு அமைக்கப் பட்டுள்ளது. முன்னாள் முதன்மை செயலாளர் ஆதிசேஷைய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து குறைக்கவும், எந்தெந்த பணியிடங்களை அவுட் சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தரலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.