யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/11/18

போரைத் தடுத்த புலவர்- நாடகம்_low

பகைவனுக்கு அருள்வாய்_low

தள்ளுவண்டி தள்ளியே _ Tamil Rhymes & Baby Song for Children _ Infobells_low

செல்லம் சாப்பிடுமாம் _ Tamil Rhymes for Children _ Infobells_low

கவனம் தேவை- சமூகவியல் 5 ஆம் வகுப்பு_low

கண்மணி பாப்பா பாடல்கள் Vol.3 _ Tamil Rhymes _ Infobells_low

உங்கள் பேனாவில் அருமையான மேஜிக் செய்யலாம் __ AMAZING pen magic TRICK rev...

உங்கள் பெயரில் Mobile RingTone வைப்பது எப்படி_ How To Set-Make-Create Na...

இங்கிலீஷ்ல எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சி-(PART-13) SPOKEN ENGLISH TH...

ஆங்கிலம் புரியிது, பேச முடியல - I Can Read, Write, Understand English Bu...

அறம் செய விரும்பு (Aram Seiya Virumbu) _ Aathichudi Kathaigal _ Tamil St...

அ சொல்லலாம் _ Tamil Rhymes for Children _ Infobells_low

How To Change Your Mobile Computer Mode In Tamil_low

English Typing -Tamil Tutorial_low

அடுத்த டிசம்பர் சாதாரணமாக கடந்து போகாது.. மொத்தமா காத்திருக்கு.. மிரள வைக்கும் புள்ளி விபரம்..?

இதுநாள் வரை சென்னையில் பெய்த மழை எல்லாம் மிக குறைவு தான். இந்த நேரத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் வெறும் 55 சதவிகிதம் மட்டுமே தான் சென்னை பெற்றுள்ளது.


டிசம்பர் மாதத்தில் அதிக கனமழை உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் பரவலாக பொழிய வேண்டிய மழை, கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கோரமுகத்தை காட்டி ஒருவழியாக்கி சென்றுவிட்டது.

இன்னும் தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கும் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இப்போது வலுவிழந்துள்ளது.

இது தொடர்ச்சியாக காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

வடமேற்குத் திசையில் நகர்ந்து செல்லும் போது இது வலுவிழக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் கனமழை பெய்யும்.

சென்னையில், இடைவெளி விட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.

சென்னையைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.



வழக்கமாக பொழியும் மழைபொழிவை விட குறைவான அளவில் பதிவாகியுள்ளதால், அடுத்த மாதம் இதன் தாக்கம் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அறிமுகமானது - Redmi Note 6 Pro!

கடந்த 4 வருடங்களுக்கு முன் இந்தியாவில் Mi3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது. அதிலிருந்து இன்று வரை அந்நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் அபரிவிதமாக இருக்கிறது. தற்போது இந்திய மக்கள் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் சியோமி நிறுவன மொபைலை பயன்படுத்துகின்றனர் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4 , ரெட்மி நோட் 5 , நோட் 5 ப்ரோ என தொடர்ந்து இந்தியாவில் மொபைலை வெளியிட்டு தன்னை நிலையாக நிலை நிறுத்தியது. இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவிற்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ - 4ஜிபி ரேம்/64ஜிபி வேரியண்ட் முதன்முதலாக தாய்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. தாய்லாந்தில் இந்த போனின் அறிமுக விலை டி.ஹெச்.பி 6,990 ஆகும். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.15,300 ஆகும்.

ரெட்மி நோட் 6 ப்ரோவின் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் ரெட்மி நோட் 6 ப்ரோவின் சிறப்பு அம்சம், விலை, முதல் விற்பனை எப்போது என்பது குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டது.

இரட்டை சிம் வசதி கொண்டதாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டது.

6.26 இன்ச் ஹெச்.டி + திரை 19:9 என்ற வீதத்தில் இருக்கும்.

கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

14nm அக்டோ- கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 SoC.

அட்ரினோ 509 GPU,

4ஜிபி/6ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் .

பின்புறம் இரண்டு கேமிராக்கள் உள்ளன.


4000mAh பேட்டரி.

விற்பனை தேதி: முதல் விற்பனை நாளை வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 12 மணிக்கு தொடங்குகிறது. பிளிப்கார்ட் மற்றும் mi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்த போனை வாங்கலாம்.

பிளிப்கார்ட் : https://www.flipkart.com

எம்ஐ : https://store.mi.com/in/buy/product/redmi-note-6-pro

இந்தியாவில் இரண்டு மாடல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ வெளியாகிறது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ.15,999 க்கும் மற்றும் 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 17,999 க்கும் விற்பனை செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும், நாளை முதல் விற்பனையை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாடலுக்கும் ரூ.3000 தள்ளுபடி  வழங்கியுள்ளது. அதன் படி 4 ஜிபி / 64 ஜிபி மாடல் : ரூ. 12,999 | 6ஜிபி / 64 ஜிபி மாடல் ரூ. 14,999 க்கும் சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த சிறப்பு தள்ளுபடி நாளை மட்டுமே. நாளை சரியாக 12 மணிக்கு விற்பனை தொடங்கும் என்பதை நினைவில் கொள்க.

"கல்விமுறை 2030" எனும் தலைப்பில் மேகாலயா மாநிலத்தில் தமிழக ஆசிரியர் கட்டுரை சமர்பிப்பு!

NCERT மூலம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெறும் NERIE கருத்தரங்கு மற்றும் ஒரிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெறும் NCSE கருத்தரங்கிலும் பங்கேற்க நமது மாநிலத்திலிருந்து திரு சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இக்கருத்தரங்கில் பங்கேற்று எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக 9.11.2018   அன்று நமது பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உயர்திரு.கருப்பசாமி அவர்கள் முன் எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தேன்.  நம் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஆய்வு கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது என பாராட்டி, ஒரிசா மற்றும் மேகாலயாவில் நடைபெறும் கருத்தரங்கில் மிகச்சிறப்பாக வழங்கி நமது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும்படி வாழ்த்தி அனுப்பினர்.
சார்ந்த ஆசிரியரை நமது 
கல்விசிறகுகள் வாழ்த்துகிறது.

Teacher Details:
Srinivasan K
Head master
Hindu primary school
AMBUR
Vellore

பிளஸ்1 தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படுமா?

பிளஸ்1 வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 கடந்த ஆண்டு முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. மாதாந்திரப் பாடத் திட்டம், புதிய மாதிரி வினாத் தாள் ஆகியவை தாமதமாக வெளியிடப்பட்டதால், பிளஸ்1 அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் சிலர் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. இவர்களுக்கென தனிப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் ஜுன் மாதம் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனால், பலரும் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.
 இந்த நிலையில், பிளஸ்1 தோல்வியுற்ற மாணவர்கள் பிளஸ்2 வகுப்பில் தொடர்ந்து பயின்று வருகின்றனர். இவர்கள் வருகிற மார்ச் மாதம் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்வெழுதும் மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்று, பிளஸ்1 தேர்வில் தோல்வியடைந்தால் மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.
 பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், பிளஸ்1 வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இனி வரும் காலங்களில் செப்டம்பர் மாதத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 எனவே, பிளஸ்1 தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தோல்வியுற்ற பாடங்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

டிச.5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறை மாறுது

வரி ஏய்ப்பை தடுப்பதற்காக வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்து வருமான வரித்துறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஓர் நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள், பான் கார்டு எண்ணுடன்  அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓர் நிதியாண்டில் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதி வரையில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் பான் கார்டு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


ஒருவர், ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவராக இருந்தால், அவரிடம் பான் கார்டு எண் இல்லை என்றால், அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்கு முன்பாக பான் கார்டு எண் பெறுவது கட்டாயம். வருமான வரி சட்டம் 1962ன் புதிய திருத்த விதிகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
* இந்தபுதிய வருமான வரி விதிமுறைகள், இதுபோன்ற நிதி பரிவர்த்தனைகளில் தொடர்பில்லாத வருமான வரி செலுத்தும் தனி நபரைக் குறிப்பிடவில்லை.
* மேலாண்மை இயக்குநர், இயக்குநர், பங்குதாரர், டிரஸ்டி, பொறுப்பாளர், நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி அல்லது தொழில் நிறுவனத்தின் அலுவலக நிர்வாகி ஆகியோர், புதிய வருமான வரி விதிகளின்படி, பான் கார்டு எண் இல்லை என்றால் அடுத்த நிதியாண்டின் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பான் கார்டு எண் பெறுவது கட்டாயம்.
* ஒரு நிதியாண்டில் பண பரிவர்த்தனை ரூ.5 லட்டத்திற்கு அதிகமாக இல்லை என்றாலும் இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் பான் கார்டு எண் பெற வேண்டும். அப்போதுதான், பண பரிவர்த்தனையை வருமான வரித்துறை எளிதாக பார்வையிட முடியும். இதன் மூலம் முறையான வரி விதிப்புக்கும் வரி ஏய்ப்பையும் தடுக்க முடியும் என்று வரி துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
* தேவைக்கேற்ப விதிமுறைகளை வருமான வரித்துறை அவ்வப்போது மாற்றி வருகிறது. பான் கார்டு விண்ணப்பிக்க தந்தை பெயர் குறிப்பிடுவது கட்டாயம். ஆனால் கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான் கார்டு விண்ணப்ப படிவத்தில் தந்தையின் பெயரை குறிப்பிட தேவையில்லை இதுவும் அடுத்த மாதம் 5ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

செல்போன் கட்டணம் உயருமா..? ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் ரிலையன்ஸ்!

வரவிருக்கிற காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், செல்போன் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி சேவைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சலுகை நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்றும், விரைவிலேயே செல்போன் சேவைக் கட்டணங்கள் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அந்தக் கட்டண உயர்வு எப்போது என்பதைத் தீர்மானிக்கப்போவதும் ரிலையன்ஸ் நிறுவனம்தான் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

செல்போன் கட்டணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம்,  மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வந்தவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, வேறு வழியில்லாமல் மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தக் கட்டணக் குறைப்பு போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் தொழிலிருந்தே வெளியேறின. ஐடியா செல்லுலார் நிறுவனம், வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைய நேரிட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன் ஐடியா உருவெடுத்தது. இதர சிறு நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.

 பின் தங்கிய போட்டி நிறுவனங்கள்

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த  இரண்டாவது காலாண்டில் 4,974 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணம் நஷ்டத்தில் இயங்கிய ஐடியா செல்லுலார் நிறுவனத்தை வாங்கியதுதான் என்றும் வோடஃபோன் நிறுவனம் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும் நஷ்டத்தைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 118.80 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி, சந்தை ஆய்வாளர்களையே ஆச்சர்யப்படுத்தியது.  அதே சமயம் 2017-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 343 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது 65.4% குறைவே.

ஆனால், ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடியே 681 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் ஈட்டி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் 3.7 கோடியாக அதிகரித்து, மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 25.23 கோடியாக உயர்த்திக் கொண்டது. தற்போது சந்தையின் வருவாய் பங்கு அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தொலைபேசி சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ்.

இதனுடன், தற்போது வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல்  ஆகிய 2 பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கும் நிலையில், செல்போன் சேவைக் கட்டணங்களை இனி இந்த நிறுவனங்கள்  உயர்த்தலாம் என, ஏற்கெனவே இத்துறை உயரதிகாரிகள் சூசகமாக தெரிவித்திருந்தனர்.  ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர்த்து, மற்ற செல்போன் சேவை நிறுவனங்கள், கடந்த சில காலாண்டுகளில் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்த போதிலும், கடன் பத்திரங்கள் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, தொழில் மூலதனத்தை அதிகரித்துக்கொண்டு போட்டியைச் சமாளித்து சந்தையில் நிலைத்து நிற்கின்றன. அதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு ஏற்கெனவே 3.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதனமாக இறைத்துள்ளது.

இந்த நிலையில், வரும் காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க, ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன. எனவே, கட்டண உயர்வு குறித்து இந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

முதலிடத்தைக் குறிவைக்கும் ஜியோ

ஆனால், ஜியோ என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் தங்கள் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க முடியும். ஏனெனில்,  ஜியோவும் நீண்ட காலத்துக்கு தற்போதைய சலுகைகளை வழங்க விரும்பாது. மற்ற செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை வளைக்கவே இலவச அவுட்கோயிங், கவர்ச்சிகரமான டேட்டா என சலுகைகளை அறிவித்தது. தற்போது,  இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களின் சந்தையைத்  தனது பிடியின் கீழ் கொண்டு வரும் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. இது நல்லதா, கெட்டதா என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த நிலையில், `4ஜி சேவை தளத்தில் தன் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் நினைக்கிறது. எனவே, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 40 கோடியாக அதிகரித்து, முதலிடத்தைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டால், அதன் பின்னர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றும், அது வரை  கட்டண உயர்வு இருக்காது’ என்று பிரபல பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லைன்ச் தெரிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலும் 2019 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்பதால், கட்டண உயர்வு இருக்காது என அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜியோ

இதனிடையே சந்தை கைப்பற்றலின் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக,   ( ஃபைபர் டு த ஹோம்)  என்ற பெயரில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணைதள சேவை அளிக்கும்  பிராட்பேண்ட் சேவைத் திட்டம் மூலம் 5 கோடி வாடிக்கையாளர்களைத் தனது நெட் ஒர்க்கின் கீழ் கொண்டு வர ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட் பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ். அதாவது, ஜியோவைப்போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரத் திட்டமிட்டுள்ளது.

இது தவிர,  தனது மொபைல் டவர்களின் எண்ணிக்கையையும் 2 லட்சத்திலிருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 2.36 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய மொபைல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. இதில் 50 % முதல் 60% பயன்பாட்டாளர்கள் இன்னமும் 2ஜி நெட் ஒர்க்கிலேயே உள்ளனர். அதாவது இன்டர்நெட் சேவை இல்லாமல் இருப்பவர்கள்.

கட்டண உயர்வு எப்போது?

இந்த நிலையில்,  ரிலையன்ஸ், தனது  4ஜி வாடிக்கையாளர்கள் தளத்தை மென்மேலும் தீவிரமாக விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம், செல்போன் சேவை சந்தையில் 35 சதவிகித வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வோடஃபோன் ஐடியா  நிறுவனத்தின் 2ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி நெட் ஒர்க்குக்கு மாறுவது மிக மெதுவாகவே நடைபெகிறது. ஏர்டெல் நிறுவனத்திலும் இதே கதைதான். எனவே, இந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறிவிடாமல் தக்கவைத்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.

மொபைல் கட்டண உயர்வு

இத்தகைய சூழலில் ரிலையன்ஸ், போட்டி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை எட்டிவிட்டால்,  அதன் பின்னர் கட்டணத்தை நிச்சயம் மாற்றியமைக்கும். அப்படி மாற்றியமைத்து விட்டால், அதைத் தொடர்ந்து வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற அதன் போட்டி நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்திவிடும்.

இருப்பினும், இப்போதைக்கு செல்போன் சேவை கட்டண உயர்வு இருக்காது. ஆனால், விரைவிலேயே அதை எதிர்பார்க்கலாம்.