புதுடெல்லி: தொழிற்சாலை ஊழியர்களுக்கான போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தற்போதுள்ள போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் இனி மாதச்சம்பளம் ரூ.21 ஆயிரம் வரை வாங்குபவர்கள் போனஸ் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதேபோல் போனஸ் உச்சவரம்பு தொகையும் ரூ.3,500ல் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் தேர்தலை கருத்தில்கொண்டே பாஜ போனஸ் உச்சவரம்பை உயர்த்தியுள்ளதாக பல்வேறு கட்சி பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பீகாரில் ஆளும் ஜனதா தள கட்சியின் ெசய்திதொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது, “போனஸ் உச்சவரம்பை உயர்த்தியுள்ளதால் பீகார் தேர்தலில் பாஜவுக்கு எந்த நன்மையும் கிடைக்காது” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக