ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும்.
பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், ஒரு மாதமாகியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோப்பில், முதல்வர் கையெழுத்து போட்டு விட்டார். அறிவிப்பு வெளியாக இருந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்; எனவே, அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது; முதல்வரிடம் இருந்து, உத்தரவு வந்தபிறகே, அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக