சமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில், கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எடை குறைவான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, அதிகளவில் புகார்கள் வந்ததால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
உடையாத கண்ணாடியில், எரிவாயுவின் அளவை காணும் வகையில் சிலிண்டர்கள் இருந்தால், எடை குறைவு மற்றும் எரிவாயு திருட்டு போன்றவை தடுக்கப்படும்.ஆனால், இந்த கண்ணாடி சிலிண்டரின் விலை, தற்போதைய விலையை விட இரு மடங்காகும். டிபாசிட் தொகையும், 1,400 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. வரும் மார்ச் முதல், இந்த சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. துவக்கத்தில், இவற்றை வெளிநாட்டில் இருந்து, இறக்குமதி செய்யவும், தற்போதுள்ள பழைய சிலிண்டர்களை, கிராமப் பகுதிகளில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது வீட்டு உபயோகத்துக்கு, 14.2 கி., எடையுள்ள சிலிண்டர்வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சிலிண்டர் விலையான, 605 ரூபாயை, வாடிக்கையாளர்கள் முழுவதுமாக செலுத்திய பின், அவர்களது வங்கி கணக்கில், மானிய தொகை, 198 ரூபாயை, மத்திய அரசு வரவு வைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக