யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/10/15

மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு

தமிழகத்தில், அனுமதியின்றி, 700 மழலையர் பள்ளிகள் இயங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 


அதன்படி, புதிய விதிமுறைகளை வகுத்து, நகல் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சில அம்சங்களுக்கு, பள்ளிகள் தரப்பில் ஆட்சேபனைதெரிவிக்கப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நகல் விதிமுறைகளை, நாங்கள் பரிசீலித்தோம். விதிமுறைகளை வகுப்பதற்கு, அரசு எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறோம். பள்ளிகள் தரப்பில், சில விஷயங்களுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.'மழலையர் பள்ளிகள், தரை தளத்தில் தான் இயங்க வேண்டும்' என, கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்பதை, எங்களால் ஏற்க முடியவில்லை. அதேபோல், ஐந்து ஆண்டு குத்தகை காலத்தை, மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பதற்கும், எந்த காரணமும் இல்லை.

இரண்டு விஷயங்களில், சிறிதளவு திருத்தங்கள் தேவைப்படுகிறது. 'மழலையர் பள்ளிகள், மூன்று மணி நேரத்துக்கு மேல் இயங்க கூடாது' என, விதிகளில் கூறப்பட்டுள்ளது.அதற்கு காரணம், பள்ளியில், மூன்று மணி நேரத்துக்கும் மேல், குழந்தைகள் இருக்க கூடாது என்பதற்காக தான். இதில், தகுந்த திருத்தத்தை மேற்கொள்ளலாம். வெவ்வேறு மாணவர்களை கொண்டு, கூடுதல் நேரம் இயங்க, பள்ளியை அனுமதிக்கலாம்.

'மழலையர் பள்ளிகளின் நிர்வாகத்தை, அறக்கட்டளை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் என்பதால், இவ்வளவு கண்டிப்பான அம்சம் தேவையில்லை. ஏனென்றால், மழலையர் பள்ளிகளை, பெரும்பாலும் வீடுகளில் வைத்து, பெண்கள் நடத்துகின்றனர்.எனவே, தனியார், நிறுவனங்கள், பங்குதாரர்கள், மழலையர் பள்ளிகளை நடத்தினாலும், அதை ஏற்கலாம்; 

ஆனால், அவற்றின் செயல்பாடு களுக்கு யார் பொறுப்பு என்பதை குறிப்பிட வேண்டும்.'ஒரு கி.மீ., தூரத்துக்குள் வசிக்கும் குழந்தைகளை தான், மழலையர் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்' என்பதை, மூன்று கி.மீ., தூரம் என வைத்து கொள்ளலாம். மேற்கூறிய திருத்தங்களை கொண்டு வந்து, புதிய விதிமுறைகளை, டிச., 15ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.இவ்வாறு 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக