யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/11/15

அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில் திட்டம்:

தமிழக அளவில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ரூ.100 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் சேகரித்து வருகிறது.மாநில அளவில் 72 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன. இதில், 10 கல்லுாரிகளுக்கு மேல் 'கிரேடு'- 1 அந்தஸ்து பெற்றுள்ளன. நடப்பு ஆண்டு பெரும்பாலான கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சில கல்லுாரிகளில் போதிய வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் வகுப்புகள் நடப்பதாகவும், ஆய்வகம், நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதியில்லை என புகார் எழுந்தது.
ரூ.100 கோடி திட்டம்: இந்நிலையில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்த அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை குறித்த பட்டியலை வழங்க, கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கல்லுாரி அலுவலர் ஒருவர் கூறுகையில்,“ கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை,சேர்,மேஜை, அறிவியல் ஆய்வக உபகரணங்கள் தேவை குறித்த அறிக்கை தர அரசு கேட்டதால், சேகரித்து அனுப்பி வருகிறோம். விரைவில் அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக