யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/11/15

B.E, - B.Tech., மற்றும் Diploma of Engineering படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின், 'பிரகதி' திட்டத்தில்  B.E, - B.Tech., மற்றும் Diploma of Engineering படிப்புகளில் சேர்ந்துள்ள 4,000 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல், 'சாக் ஷம்' என்ற திட்டத்தில் B.E, - B.Tech., மற்றும் Diploma of Engineering படிப்புகளில் சேர்ந்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 1,000 பேருக்கு,  உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

இவர்களுக்கு, கல்வி கட்டணமாக, 30 ஆயிரம் ரூபாய்; மாதம், 2,000 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு மட்டும், உதவித் தொகை கிடைக்கும்.

உதவித்தொகை பெற, குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம், நவ., 23 வரை விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக