வரும், 2016 மார்ச் மாதம் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில், கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை, ஆப்லைன் முறையில் தயாரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் நடத்தப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, தேர்வுத்துறையின் செயல்பாடுகளான, தேர்வுக்கு விண்ணப்பிப்பது, ஹால்டிக்கெட் வழங்குவது, தேர்வு முடிவு வெளியிடுவது, தற்காலிக சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் வழியாக செயல்படுத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், உறுதிமொழிப்படிவமும், கடந்த மாதத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்டது.
தற்போது, சேகரிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் விபரங்களை ஆப்லைன் முறையில், பட்டியலாக தயாரித்து வைத்துக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தேர்வுத்துறையின் இணையதளத்தில், இதற்காகவே உருவாக்கப்பட்ட சாப்ட்வேரை டவுன்லோடு செய்து, அதில், மாணவர்களின் விபரங்களை பட்டியலாக தயாரிக்க வேண்டும்.
இப்பணிகளை, நவம்பர், 2ம் தேதி முதல், நவம்பர், 16ம் தேதிக்குள் முடித்து, பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், பின்னர் அறிவிக்கும் தேதியில், அவற்றை தேர்வுத்துறை இணையதளத்தில், அப்லோடு செய்ய வேண்டும் எனவும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக