யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/15

கணினி அறிவியல் ஆசிரியர்கள் 8.11.2015 அன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம்
தரவேண்டும்...
அரசு பள்ளியில் பயிலும்
மாணவர்களின் நலனுக்காக
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை,எளிய,
மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும்.
மெட்ரிக் ,CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கட்டாய பாடமாக உள்ளது .
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம்,அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகம் தகவல்
தொழில்நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குறியது.
சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது ....
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்
2011 ஆம் கல்வியாண்டில்
சமச்சீர் கல்வியில் 6 ,7,8,10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது ஆனால் காரணம் ஏதுமின்றி அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது. சில மாதத்தில் கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது.
தற்போது அனைத்து தனியார் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது.
கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தக் கோரி.
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால்
ஆசிரியர்கள்,ஆசிரியர் சங்கங்கள்,கணினி ஆசிரியர்கள் அனைவரும் ஆதரவு தாரீர்
இடம்:
தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில்
நாள்
8.11.2015
காலை 10 மணி.
வெ.குமரேசன்
மாநில செயலாளர்.
9626545446
தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக