யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/15

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள்www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் பதிவு மூப்பு வழங்கப்படும். இதில் 2015 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நடத்துநர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் வாரியாக பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் 4.94 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 60 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக