யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/15

பள்ளிகளில் டெங்குத் தடுப்பு நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தல்

பள்ளிகளில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் ஆசிரியர்கள் தீவிரகவனம் செலுத்தவேண்டும் என மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறினார்.மதுரை மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தநிலையில் மாவட்டத்தில் பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர் தீவிரப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது: பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தினமும் டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசு தங்காமலிருக்க தேவையான நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும்.மாணவர்கள் உடல் நலம் குறித்து அறிந்து காய்ச்சல் பாதிப்பிருப்பின், பெற்றோர் மூலம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். நீண்டநாள் விடுமுறையில் இருக்கும் மாணவர், மாணவி குறித்து விசாரித்து, அவர்களுக்கு டெங்கு பாதிப்பிருக்கிறதா? என அறிந்து சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கவேண்டும்.

வீடுகளில் தேவையற்ற பொருள்கள் இருந்து தண்ணீர் தேங்கியிருக்கிறதா? என மாணவ, மாணவியர் மூலம் அறிந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையில் மாணவ,மாணவியரையும் ஈடுபடுத்தவேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக