யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/15

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதிசெய்ய தொடக்ககல்வித் துறைஅதிரடி
உத்தரவிட்டுள்ளது.தொடக்க கல்விஇயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள்அந்தந்த ஒன்றியத்தின்உதவி, கூடுதல்உதவி தொடக்ககல்வி அலுவலகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த பணி பதிவேடுகளில்ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரியகாலத்தில் மேற்கொள்ளப்படாமல்இருப்பதாக தொடக்ககல்வி இயக்குநருக்குபுகார்கள் சென்றன. அதன் அடிப்படையில்தமிழக தொடக்ககல்வித் துறைஇயக்குநர்பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு களைஉரிய காலத்தில்முறையாக பதிவுசெய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2 மாதங்களுக்கு ஒரு முறைஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

உதவி, கூடுதல் உதவிதொடக்கக் கல்விஅலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின்பணிப் பதிவேடுகளை உரியகாலத்தில் முறையாகபதிவு செய்யப்பட்டுள்ளதைஉறுதி செய்துகொள்ள வேண்டும்.ஆசிரியர்களின் பணிபதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களைபதிவு செய்யும்முன்பு உயர்கல்விபயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்,சான்றிதழ்கள்தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு ஆண்டிலும்டிச.31ம்தேதி ஒவ்வொருஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கானதேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில்உள்ள பதிவேடுகளின்அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, சரியானசான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள்நடந்தது தெரியவந்தால்சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களின் வளர்ஊதியம், பதவிஉயர்வு, ஊதியம்நிர்ணயம் மற்றும்ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணிபதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில்அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஒவ் வொருஉதவி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்தங்கள் கீழ்பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிபதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால்15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்குஒரு முறைஅனைத்து பணிபதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.உதவி, கூடுதல் உதவிதொடக்க கல்விஅலுவலர் பணிமாறுதல் மூலம்வேறு ஒன்றியங்களுக்குமாறுதல் பெற்றுசெல் லும்போது அனைத்துஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்தவிடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும்பதிவு செய்துவிட்டுத் தான்செல்ல வேண்டும்.உதவிதொடக்க கல்விஅலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்ஆய்வு செய்யும் போதுஇந்த விவரங்களைசரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக