சென்னை:மழை சேதங்களை கணக்கிடும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள், அரசு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும், மழையால் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டு, உடனுக்குடன் தெரிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மழை சேதத்தை கணக்கிட, தாலுகா வாரியாக, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக