யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/15

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாகநடைபெற்று வருகிறது.


பிளஸ்-2 மாணவர்களின்விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள்இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது.இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....:இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டுவழங்கப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.அரையாண்டு தேர்வு மாற்றம்?அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக