யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/15

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு முதல்வர் அறிவிப்பு

சென்னை: 'தமிழக பள்ளிகளுக்கு, பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டிச., 7 முதல் துவங்க இருந்த, அரையாண்டு தேர்வுகள், ஜனவரி, முதல் வாரத்தில் நடத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:தொடர் மழையால் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில், காவல் துறை, தீயணைப்பு துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, கடலோர பாதுகாப்புப்படையினர், பாதிக்கப்படும் மக்களை படகுகள் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, தயார் நிலையில் உள்ளனர். அந்த மக்களுக்கு, உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்களை, தொடர்ந்து நடத்தவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நியமனம்
* திருவள்ளூர் மாவட்டம்- அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ரமணா, அப்துல் ரஹீம்
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் - அமைச்சர்கள் பழனியப்பன், வேலுமணி, தங்கமணி, சின்னையா
* சென்னை மாநகராட்சி பகுதி - அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், வளர்மதி, கோகுலஇந்திரா
* கடலுார் மாவட்டம் - அமைச்சர்கள் சம்பத், உதயகுமார், ஆகியோர் நிவார பணிகளை மேற்பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவர்.
தேர்வு ஒத்திவைப்பு
பல மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிச., 7 முதல் நடக்க இருந்த, அரையாண்டு தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஆய்வு
மழை பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில், நேற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், எட்டு அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் பல துறைகளின் அதிகாரிகள், கலந்து கொண்டனர். கூட்டத்தில், வௌ்ள பாதிப்புகளை தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக