யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/15

சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஆட்சிப்பணி உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக, பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறியுள்ளார்.


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, வருகிற 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை நடத்த உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில், இந்த தேர்வை எழுதும் மாணவர்கள், சென்னையையே பிரதான மையமாக தேர்வு செய்து, சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள விடுதிகள், பயிற்சி மையங்கள், வாடகை வீடுகளில் தங்கி, தேர்விற்காக தயாராகி வருவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முழுவீச்சில் தேர்விற்கு தயாராகி வந்த சிவில் சர்வீஸ் மாணவர்கள், கனமழை மற்றும் வெள்ளத்தால், கடந்த சில வாரங்களாக, பாடங்களில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே, மாணவர்கள் நலனை கருதி, அவர்கள் நல்ல முறையில் தேர்விற்கு தயாராகும் வகையில், சிவிஸ் சர்வீஸ் தேர்வுகளை, குறைந்த பட்சம் 2 மாதங்களுக்காவது ஒத்திவைக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக