யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/1/16

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் : மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் Posted: 22 Jan 2016 07:35 PM PST சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதன்படி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஊனமுற்றோருக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில் எத்தனை இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லி போட்டித் தேர்வை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர். தையல் ஆசிரியை பிரியதர்ஷினி கூறுகையில், “2012 ஏப்ரலுக்கு பின் 4 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் செய்யவில்லை. தற்போது சிறப்பு ஆசிரியர் பணிக்காக சுமார் 90ஆயிரம் பேர் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது,”என்றார். 7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்' Posted: 22 Jan 2016 07:34 PM PST பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தி.மலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார், கடந்த 20ம் தேதி, போளூர் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது, சந்தவாசல் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள், கஸ்தம்பாடி பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள், பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரிவந்தது. அவர்களுக்கு ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Jan 2016 07:32 PM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி,தலைமை செயலக தலைவர் கணேசன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் எஸ்.மோசஸ் உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..! Posted: 22 Jan 2016 07:30 PM PST திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. திருச்சி, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். நெசவுத் தொழிலாளி. இவர் மகள் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). துறையூரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நன்றாக படித்தார். பெற்றோரும், 'மகள் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேறிவிடுவாள்' என நம்பிக்கையோடு ஊக்கம் அளித்தனர். தேர்வு நாளும் வந்தது. அனைத்துப் பாடங்களையும் நன்றாக எழுதிய திருப்தியில் இருந்தார் சாந்தினி. தேர்வு முடிவைப் பார்த்தபோது அதிர்ந்தே போனார். 'சாந்தினி ஃபெயில்' எனக் காட்டியது ரிசல்ட். கதறியழுதவரை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. 'நன்றாகப் படிக்கும் மாணவி ஃபெயிலாக வாய்ப்பில்லையே' என ஆசிரியர்களும் அதிர்ந்து போனார்கள். மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது கூடுதல் அதிர்ச்சி. மாணவி எடுத்த மதிப்பெண்கள் பின்வருமாறு: தமிழ்-93, ஆங்கிலம்-75, கணிதம்-73, அறிவியல்-2, சமூக அறிவியல்-100 எனக் காட்டியது. 'எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் இருக்கும்போது அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை' என சமாதானம் செய்த ஆசிரியர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தினர். இங்குதான் சர்ச்சை ஆரம்பமானது. மறுகூட்டல் விண்ணப்பத்தை பார்த்த அதிகாரிகளுக்கு குளறுபடி நடந்திருப்பது புரியவந்தது. மாணவியின் ஒரிஜினல் விடைத்தாளில் என்ன கண்டார்களோ தெரியவில்லை. அடுத்த நாளே, மாணவி படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து வரச் செய்தனர். அங்கு நடந்ததை விவரித்தார் மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். "டி.பி.ஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகத்துக்குள்ள சாந்தினியையும் அவரது அப்பா, அம்மாவையும் கூட்டிக்கிட்டு போனாங்க. சாந்தினி பெற்றோரை வெளியே உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு அதிகாரியோட அறைக்குள்ள கூட்டிட்டுப் போனாங்க. அங்க அந்த அதிகாரி, 'இங்க பாரு. மறுகூட்டலுக்கு எல்லாம் விண்ணப்பிக்க வேண்டாம். மறு தேர்வை எழுது. அறிவியல் பேப்பர்ல 2 மார்க் வர்றதுக்குக் காரணம். அப்ப மனநிலை சரியில்லாம இருந்தேன். மாத்திரை சாப்பிட்டதால, மாத்தி எழுதிட்டேன்னு லெட்டர் எழுதிக் கொடு'ன்னு எழுதி வாங்கிட்டார். சாந்தினியும் அழுதுட்டே வெளிய வந்துச்சு. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு மிரட்டி அனுப்பிட்டாங்க" என்றார் வேதனையோடு. இதையடுத்து மறுதேர்வுக்கு விண்ணப்பித்தார் மாணவி சாந்தினி. அந்தத் தேர்வில் சாந்தினி எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா? 93 மதிப்பெண்கள்! இப்போது மொத்த மதிப்பெண் 434. தற்போது பிளஸ் 1 அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார். மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை அறிய ஆர்.டி.ஐ மூலம் மனு செய்தார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். அதைப் பற்றி நம்மிடம் விவரித்த சிவ இளங்கோ, "கடந்த ஆண்டு 14.9.15 அன்று ஆர்.டி.ஐ மூலம் விடைத்தாளைக் கேட்டு மனு அனுப்பினோம். எந்தப் பதிலும் இல்லை. மேல்முறையீட்டில், தகவல் ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், ' விடைத்தாளைக் கொடுக்கத் தேவையில்லை' என பதில் அனுப்பினார். இதனால் அதிர்ந்து போன நாங்கள், அவருக்கு ஒரு பதில் அனுப்பினோம். 'ஆர்.டி.ஐ சட்டத்தின்படி விடைத்தாளைக் கொடுக்க இடமுள்ளது. தேவைப்பட்டால் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் ஆர்.டி.ஐ குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம். வந்து கலந்து கொள்ளுங்கள்' என கடிதம் அனுப்பினோம். அதன்பிறகே எங்களுக்கு மாணவி எழுதிய அனைத்து விடைத்தாள்களும் கிடைத்தன. மாணவி 2 மதிப்பெண் எடுத்ததாகச் சொல்லப்படும் விடைத்தாளில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை. எங்களுக்குக் கொடுப்பதற்காக யாரையோ வைத்து எழுதியுள்ளனர். அந்தத் தாளில், 'மலேரியா எப்படிப் பரவுகிறது?' என்ற கேள்விக்கு, 'எங்கள் பகுதியில் மலேரியா பாதிப்பு கிடையாது. எப்படிப் பரவுகிறது என உங்களுக்குத் தெரிந்திருக்குமே? பத்தாம் வகுப்பு மாணவியிடம் கேட்கலாமா? மலேரியாவைக் கட்டுப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். இதை என்னிடம் கேட்க உங்களுக்கு அறிவே இல்லையா? இத்துடன் எனது விண்ணப்பத்தை முடித்துக் கொள்கிறேன்' என ஒரு பதில் எழுதப்பட்டுள்ளது. அடுத்து, மழைநீர் சேமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு, 'மழைநீரை சேமிக்கத் தெரியாத கழுதைகள்தானே நாம். மரம் இல்லாத இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. சீக்கிரம் சாகப் போகிறேன். இதைப் படிக்கும் நீங்களும் சாகத்தான் போகிறீர்கள்' என பதில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி, அறிவியல் பாடத்தில் இப்படியொரு பதிலை எழுதுவாரா? அதுவும் மறுதேர்வில் 93 மதிப்பெண்ணை அந்த மாணவி எடுத்திருக்கிறார். ஆசிரியர்கள் செய்த பெருந்தவறால் அந்த மாணவிக்கு மென்டல் பட்டம் கட்டிவிட்டார்கள் அதிகாரிகள். மாணவி பிளஸ் 2 முடித்துவிட்டு எங்கு சென்றாலும், பத்தாம் வகுப்பில் ஃபெயில் என்றுதானே இருக்கும்? இந்தத் தவறுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைக்கு மாவட்டக் கல்வி அதிகாரியாக புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வோம்!" என்றார் அதிர்ச்சி விலகாமல். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Jan 2016 07:28 PM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி,தலைமை செயலக தலைவர் கணேசன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் எஸ்.மோசஸ் உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். வாசிப்பை வளர்க்க ’வாசித்தலே எல்லை’! Posted: 22 Jan 2016 09:03 AM PST உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பின் கீழ், அறிவிக்கப்பட்ட போட்டிக்கான ஆய்வு, நேற்று துவங்கியது. அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பில், இப்போட்டி தமிழக கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளிலுள்ள, 4 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் வாசிப்பு திறன் அளவிடப்படுகிறது. 4, 5ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் ஆய்வு செய்யப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் பள்ளிக்கு, ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும் என, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டது. இதன் அடிப்படையில் உடுமலையில், 10, குடிமங்கலத்தில், 9 மடத்துக்குளத்தில், 7 பள்ளிகள், இப்போட்டிக்கு விண்ணப்பித்துள்ளன. நேற்று இப்பள்ளிகளில் ஆய்வு நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு பகுதியிலுள்ள பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு நடத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் மூன்று பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சிறந்த பள்ளியை தேர்வு செய்கின்றனர். ஆசிரியர்களுக்குள் அடிதடியால் கல்வி பாதிப்பு!

ஆசிரியர்கள் சண்டையால், கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, பெற்றோருடன், மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக, சூரியசெல்வி மற்றும், 10 ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஆய்வக உதவியாளர் என, 13 பேர் உள்ளனர். 286 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியை சூரியசெல்வி, கணக்கு ஆசிரியர் மதன், தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் குறித்து ஆலோசனை நடந்தது.அப்போது, மூன்று பேருக்கும் இடையே வழக்கம் போல வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியை சூரியசெல்வி, தன்னை தரக்குறைவாக பேசி, ஜாதி பெயரை சொல்லி திட்டி, அடித்ததாக, ஆசிரியர்கள் மதன், வெங்கடேசன் மீது ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

ஜோலார்பேட்டை போலீசார், நேற்று காலை, 11:00 மணிக்கு, பள்ளிக்கு வந்தனர். தகவல் அறிந்த பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோருடன் வந்து, பள்ளி எதிரில் சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் சண்டை யால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதனால், இவர்கள் மூவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என, பெற்றோர் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக