யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/3/16

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ் Posted: 23 Mar 2016 08:19 PM PDT இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன. * இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் * வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும் * பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் * 'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும் *தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும். இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை Posted: 23 Mar 2016 07:54 PM PDT மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்தாலும், மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் அனுப்பவில்லை. இந்த எண்ணின்படியே, மாணவர்களின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கோடை விடுமுறைக்குள் ஆதார் எண் விவரங்களை அனுப்ப வேண்டும். தாமதமானால், ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்

விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. விண்ணப்பம் கொடுத்தவர்கள், பள்ளிக்குள் நுழைய முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளிகளை விட, சில குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் நன்கொடை என, பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், பெற்றோர் முட்டி மோதுகின்றனர். ஆனால், இந்த பள்ளிகளில், 'அட்மிஷன்' நடைமுறை புரியாத புதிராகவே உள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஏப்ரலில் விண்ணப்பம் கொடுத்து, மே மாதம், இரண்டாம் வாரம் முதல், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், திருச்சி போன்ற பெருநகரங்களில், கிறிஸ்துமஸ் விடுமுறைமுடிந்ததும், விண்ணப்பம் கொடுத்து, மாணவர் சேர்க்கையை மார்ச்சுக்குள் முடித்து விடுகின்றனர். இந்த நடைமுறை பள்ளிக்கு பள்ளி, நகரத்துக்கு நகரம், மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடுகிறது. எந்த பள்ளியில், எப்போது விண்ணப்பம் கொடுக்கின்றனர்; எப்போது, மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த நடைமுறையையும் பெற்றோர் பின் தொடர்ந்து, விண்ணப்பம் வாங்கி, பள்ளிகளில் கொடுத்து விடுகின்றனர். ஆனால், 'அட்மிஷன்' கிடைத்ததா என்றால், அது தான் இல்லை. விண்ணப்பம் கொடுத்த பலரும், தினமும் பள்ளிகள் முன் காத்து கிடக்கின்றனர். ஆனால், அவர்களை தனியார் பள்ளிகள், உள்ளே அனுமதிக்காமல், காவலர்கள் மூலம் பதில் அளிக்கின்றனர். பெரும்பாலான பெற்றோருக்கு, 'அட்மிஷனுக்கு தேர்வானால், வீட்டுக்கு கடிதம் வரும்' என்ற, ஒரே பதிலையே திரும்ப, திரும்ப சொல்லி அனுப்புகின்றனர். இதனால்,பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம், 'சீட்' கேட்டு, பலர் தஞ்சம் புகுந்துள்ளனர். கல்வி அதிகாரிகளிடம் சிபாரிசு கடிதம் பெற்று ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கும், பள்ளிகள் அட்மிஷன் வழங்குவதில்லை.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தனியார் பள்ளிகள் ஏஜன்ட்களை வைத்து பணம் வசூலித்து, 'அட்மிஷன்' வழங்குவதாக, தகவல் வருகிறது. ஆனால், அதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து புகார் இல்லை. எழுத்துப்பூர்வ புகார் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.

1 கருத்து:

  1. Good Sir, But
    Govt school Disadvantages list blow
    1.Good Experienced teachers but no implement
    2. Good buildings but no maintenance
    3. Free Books but No teacher implement
    4. free Laptop but no computer science course and no knowledge computer science Teachers (very important)
    5. Good Govt employee working Govt sector but our child no study govt school
    6. Need for Govt job but studying private sector
    note: Need to change otherwise automatic improve the Tamil Nadu(National and Inter National Level)

    பதிலளிநீக்கு