யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/3/16

பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு Posted: 24 Mar 2016 09:13 PM PDT தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம்முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து,இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. என்.சி.டி.இ., உத்தரவு: அதே போல், இரண்டு ஆண்டு படிப்பில்புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, என்.சி.டி.இ.,உத்தரவிட்டது; பாடத்திட்டத்தின் அம்சங்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பியது.இதன் அடிப்படையில், தமிழகத்துக்கு தேவையான பாடத்திட்டத்தை, கல்வியியல் பல்கலை கடந்த ஆண்டே தயாரித்தது.கல்லுாரிகள் எதிர்ப்பு:ஆனால், இதற்கு தமிழக அரசு உரிய நேரத்தில் அனுமதி அளிக்கவில்லை. செப்டம்பரில் மாணவர்களை சேர்த்த பின், அவசர அவசரமாக பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, கல்வியியல் பல்கலை வெளியிட்டது.புதிய பாடத்திட்டப்படி, முதல் ஆண்டு மாணவர்கள், ஒன்பது பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதற்கு தனியார் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, பாடத்திட்டத்தை திருத்தும் பணியில் உயர்கல்வித் துறை ஈடுபட்டது.இதுவரை, 15 முறை பாடத்திட்டம் திருத்தப்பட்டும், இன்னும் பாடத்திட்டம் முடிவாகவில்லை என, கல்லுாரி நிர்வாகங்கள் தெரிவித்தன.இழுபறி நிலை:கல்லுாரி முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:பாடத்திட்டத்தை, உயர்கல்வி அதிகாரிகள் தன்னிச்சையாக திருத்துவதால், மாணவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என, அவர்களுக்கு தெரியவில்லை. பொதுவாக பாடத்திட்டத்தை உருவாக்கினால் அதற்கு, கல்வியாளர்கள்,கல்லுாரிகள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் கொண்ட குழு மூலம் கருத்து கேட்க வேண்டும்.கல்வியாளர் கருத்துகளின் படி, திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய அம்சங்களை சேர்க்கவோ வேண்டும்.இதை கல்வியியல் பல்கலை அதிகாரிகள் செய்யாததால், பாடத்திட்டத்தை முடிவு செய்வதில் இழுபறி நிலை உள்ளது.தற்போதே, ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது என்று தெரியாமல் கல்லுாரிகள் தவிக்கின்றன. அடுத்த மாதம் தேர்வும் வந்து விடும்; அதற்குள் புதிய பாடத்திட்டம் கிடைத்து, பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா அல்லது தேர்வை தள்ளி வைக்க வேண்டுமா என, குழப்பத்தில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இன்ஜி., கல்லூரிகளுக்கு முன்கூட்டியே தேர்வு.

சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
'மே முதல் வாரத்திற்குள் கல்லுாரி மற்றும் பல்கலை தேர்வுகளை முடித்து, கல்லுாரி கட்டடங்களை தேர்தல் பணிக்கு ஒப்படைக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளதால், அதன்படி செயல்பட தமிழக அரசும்உத்தரவிட்டுள்ளது.
எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகள், 40 ஆர்கிடெக் கல்லுாரிகள்; தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 100க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முன்கூட்டியே செமஸ்டர் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கமாக, மே இறுதி வாரம் வரை, செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். ஆனால், இந்த முறை மே, முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடித்து விடுமுறை விடப்பட உள்ளது. அதற்காக, பாடங்களை விரைந்து முடிக்க, பேராசிரியர்களுக்கு கல்லுாரி நிர்வாகங்கள்உத்தரவிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக