யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/8/16

தணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செயதல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குனர் உத்தரவு Posted: 05 Aug 2016 10:55 PM PDT அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?

அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.


அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கப்படுவது இல்லை. மேலும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்கள், வீட்டிலிருந்து, 7:00 மணிக்கே புறப்பட வேண்டும். மாலையில், சிறப்பு வகுப்பு முடித்து, 6:00 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இதனால், காலை உணவும் உண்ண முடியாமல், மாலையிலும் நீண்ட நேரம் பள்ளி யில் இருக்க வேண்டி யுள்ளதால், மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து, ஆசிரி யர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: சிறப்பு வகுப்பு நடத்தும் முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளிடம், கல்வி அதிகாரி கள் கருத்து கேட்டிருக்கலாம். மாணவர்கள் மயங்கி விழும் போது, ஆசிரியர்கள், தங்கள் பணத்தில் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர், தரமான, 'ஸ்நாக்ஸ்' கொடுத்து அனுப்புகின்றனர். பள்ளி கேன்டீனில் வாங்க, பணமும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த வசதிகள் இல்லை. எனவே, அரசு பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு, அரசு சிற்றுண்டி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக