யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/8/16

தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு

தொடக்கபள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளியமுறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான
'சிடி'க்கள் தொகுப்பைமாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சிநிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள்அதிகம் பயன்படுகின்றன.
ஆனால் பேச்சு வழக்கில் இந்தஎழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்புமருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ்எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்றஇறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும்மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள்உருவாக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியில்எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல(லாங்குவேஜ் செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ்பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவதுதமிழ்' என்ற தலைப் பில்சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதாவெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்படஉள்ளன. தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:
எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காதுகேளாத, வாய் பேசாத மாணவர்களுக்குகற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழிரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன்எழுத்துக்களை எளிதில் புரிய வைத்துபிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ளபின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்பஉத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக