யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/16

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் பாதுகாப்பு வழிமுறை: பல்கலை. மானியக் குழு அறிவிப்பு.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்து அறிவித்துள்ளது.உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர் பாதுகாப்பான, சுமுகமான சூழ்நிலை நிலவ வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி எனப்படும் பல்கலை. 
மானியக்குழு வரையறுத்துள்ளது.அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய சட்டதிட்டங்களில் இவ்வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.கல்வி நிலைய வளாகத்தில் மாணவ, மாணவியர் இருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் விவரம்:மாணவர்கள் தங்கும் விடுதிகளில் குறிப்பிடப்பட்ட அளவு உயரத்துடன் கூடிய மதில் சுவர் கட்டப்பட வேண்டும்.

இதற்கான நுழைவு வாயில்கள் 3-க்கும் மேல் இருத்தல் கூடாது. அனைத்து வாயில்களிலும் பாதுகாவலர்கள், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் வரும் போது, அவர்களை அடையாளம் காணும் வசதிகள் கொண்டிருக்க வேண்டும். அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்தே அனுப்ப வேண்டும்.பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை: கல்வி நிறுவனங்கள், விடுதிகளில் மாணவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை மேற்கொண்டால், வெளியாளை அடையாளம் கண்டுவிடலாம்.மாணவர்கள், ஊழியர்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடியஅடையாள அட்டைகளை தர வேண்டும்.எதாவது அசம்பாவிதம் உண்டானால் அதுகுறித்து மாணவ, மாணவியருக்கு உடனே தெரிவிக்கும் அவசர கால தகவல் தெரிவிப்பு வசதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.மேலும் பல்கலைக்கழகங்களில் காவல் நிலையம் அல்லது புறக்காவல் நிலையம் அமைத்தால் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்.2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு ஒழுங்குமுறை விதிகளை அனைத்து தரப்பினரும் அறிந்திருக்க வேண்டும்.உளவியல் ஆலோசகர் அவசியம்: மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகள், மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஏதுவாக உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.ஒவ்வொரு 25 மாணவர்கள் குழுவுக்கு ஆசிரியரை உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும். அவ்வப்போது பெற்றோர் சந்திப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும்.

தற்காப்புக் கலைப் பயிற்சி:

மாணவ, மாணவியருக்கு பேரிடர்மேலாண்மை தொடர்பான உரிய விழிப்புணர்வு பயிற்சிகளை அளிக்க வேண்டும்.பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவியோடு, பயிலும் மாணவியர், பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி தர வேண்டும்.கல்வி நிறுவன ஊழியர்களுக்கு பாலியல் கொடுமைகள் குறித்தவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவகங்களில் தரமான தின்பண்டங்கள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவ, மாணவியர் சுற்றுலா பயணங்கள், கல்வி சுற்றுலா செல்லும் போது ஒரு ஆசிரியை உள்பட ஆசிரியர்கள் உடன் செல்ல வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதங்களை பெறுதல்அவசியமாகும். சுற்றுலா பயணங்களில் மாணவ, மாணவியர் செல்லிடப்பேசி போன்றவற்றை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக