முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று ஆன்ைலன் மூலம் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 15 நாட்களாக கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் மாநில அளவில் ஆன்லைன் மூலம் இன்று நடக்கிறது.
இன்றைய கவுன்சலிங்கில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கும் இன்று தொடங்குகிறது. முன்னதாக பணி நிரவல் என்ற பெயரில் முக்கியமான இடங்களை அதிகாரிகள் நிரப்பிவிட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவலில் பெரும் குளறுபடியோடு நடந்துள்ளதால், பணி நிரவலின் போது வழங்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் கோரிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங்கை தொடக்க கல்வி–்த்துறை நடத்த உள்ளது.
இதற்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கான பட்டியலை தொடக்க கல்வித்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. அதேநேரம், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்று பட்டியலை வெளியிடவில்லை. முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக