யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/8/16

புதிய பள்ளி துவக்கம், தரம் உயர்வு : தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்பு.

மிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்குவது, பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேசமயம், பயோ மெட்ரிக் வருகை முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்றுஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110 விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நடப்பாண்டில் தமிழகத்தில் புதியதாக 5 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.  தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும்.நடப்பாண்டில் ரூ.60 கோடியே 79 லட்சம் செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளதுடன், நன்றியும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியதாவது: முதல்வர் அறிவிப்பில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர் வருகை பயோ மெட்ரிக் முறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஆசிரியர்களை குறிவைத்து செய்வதுபோல உள்ளது. இந்த முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணியல்லாமல் பல பணிகள் கொடுக்கப்படுவதால், பயோ மெட்ரிக் முறை பொருத்தமாக இருக்காது.மேலும், தமிழகத்தில் 355 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும்உதவியாளர்கள் இல்லை. 1000 எழுத்தர் பணிகள் காலியாக உள்ளன.

இதனால் ஆசிரியர்கள் இலவச பொருட்களை எடுத்து செல்வது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றனர். ஆதார் அட்டை தொடர்பான பணிகளையும், தேர்தல் ப ணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆசிரியர் நலனில் அக்கறை கொண்ட அரசு, நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். 7வது ஊதியக் குழுவில் கூறப்பட்டதை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இவ்வாறு தாஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக