யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/9/16

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!!!

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!!!
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பல்கலை பதில் மனு தாக்கல் செய்தது.


தர்மபுரி குளோபல் அகாடமி பார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தாக்கல் செய்த மனு: எங்கள் கல்வி மையம் மதுரை காமராஜ் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலை நிலைக்கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ல், பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம். 2015-16 கல்வியாண்டில் எங்கள் மையம் மூலம், 400 மாணவர்கள் தொலைநிலைக் கல்வியின் கீழ் படித்தனர்.


வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஒரு பள்ளியில், 2015 மே 17ல் தேர்வு நடந்தது. ஓராண்டிற்கு மேலாகியும், விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை. தேர்வு முடிவு வெளியாகவில்லை. விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் பதில் மனு:---தர்மபுரி கல்வி மையம் மூலம் பயின்ற மாணவர்கள் திருப்பத்துார் மையத்தில் தேர்வு எழுதவில்லை. முறைகேடு நடந்திருக்கலாம் அல்லது &'காப்பி&' அடித்து எழுதியிருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. பல்கலை உயர்மட்டக்குழு விசாரித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

இதனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு பதில் மனு செய்திருந்தார். விசாரணையை, நீதிபதி அடுத்தவாரம் ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக