யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/9/16

பள்ளி, கல்லூரிகள் இயங்குமா?

கடையடைப்பு போராட்டம் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பிரின்ஸ்பாபு கூறியதாவது: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, காலாண்டு தேர்வு, அரசின் பொது வினாத்தாளுடன், இன்று நடத்தப்படுகிறது. அரசு விடுமுறை அறிவிக்காததால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். ஆசிரியர், மாணவர்கள், 'கறுப்பு பேட்ஜ்' அணிந்து வருவர்.


தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களின் சங்க தலைவர் எம்.ஜே.மார்ட்டின் கென்னடி: எங்கள் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, முடிவு செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன்: மாணவர்கள் பாதுகாப்பு கருதி, இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம் என, முடிவு செய்துள்ளோம். இன்று நடக்கவிருந்த தேர்வுக்கான மாற்று தேதி, பின்னர் அறிவிக்கப்படும். எனினும், பள்ளிகள் விடுமுறை அளிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளி நிர்வாகங்களே முடிவு எடுத்து கொள்ளலாம்.

நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார்: பள்ளி வாகனங்கள் இயங்காது என்பதால், எங்கள் சங்கத்தில்உள்ள பள்ளிகள் செயல்படாது; சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவோம்.

அரசு நிலை என்ன? : பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது, 'பள்ளிகளுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கவில்லை' என்றார். தனியார் கல்லுாரிகள் நிலவரம் குறித்து, எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கோட்டையில் ஆலோசனை : 'பந்த்'தால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரயில்களில் பாதுகாப்பு : 'பந்த்'தையொட்டி, ரயில் மறியல் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, தாம்பரம் உட்பட, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 'ரயில் போக்குவரத்தில், எந்த பாதிப்பும் இருக்காது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய ஓட்டல்கள் பங்கேற்பு : கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதால், தமிழகம் முழுவதும் உள்ள, மூன்று லட்சம் கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு சிறு டிபன் கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால், சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெட்ரோல் 'பங்க்' இயங்கும் : பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று, 'பங்க்'குகளை மூடுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நடத்தும், 197 பெட்ரோல், 'பங்க்'குகள், மாநிலம் முழுவதும், இன்று செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., ஆதரவு : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:தமிழர்களின் உரிமையை, எந்த விதத்திலும் விட்டுத் தரக்கூடாது என்பதால், தமிழக பா.ஜ., முழு ஆதரவை தெரிவிக்கிறது. அதேநேரத்தில், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அருகில் போராட்டம் போன்ற வன்முறையை துாண்டும் அறிவிப்புகளை, சிலர் உள்நோக்கத்தோடு
வெளியிட்டு இருப்பதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நகை கடைகள்
இன்று அடைப்பு
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
தமிழகத்தில், 35 ஆயிரம் தங்க நகை கடைகள் உள்ளன. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகாவில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இன்று, 'பந்த்'
நடக்கிறது. அதற்கு ஆதரவாக, அனைத்து நகை கடைகளும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக