யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/9/16

புதிய ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு : குழுவிடம் அரசு ஊழியர் சங்கத்தினர் மனு

பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி கள், அரசு குழுவிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழக அரசு பணியாளர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது; இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசுப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அவர்களின் பணிக் காலத்திற்கு பின் பாதுகாப்பு அரணாக இருந்தது; அதில், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில், குடும்ப ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில், பணியாளரின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதிய நிதிக்கு மாற்றப்படும். இதற்கு சமமானத் தொகையை, மாநில அரசு, தன் பங்காக, அளிக்கும். இத்தொகை, அரசால் நியமிக்கப்படும், நிதி மேலாளர் வசம் ஒப்படைக்கப்படும்; இத்தொகையை, பங்கு சந்தை யில் முதலீடு செய்வர். அந்த முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயில், பணியாளர் ஓய்வு பெறும் போது, அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் உள்ள பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்கப் படும். இதன் காரணமாக, எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை உறுதியாக கூற இயலாது; பிடித்தம் செய்த தொகையை, பாதியில் பெற இயலாது என, பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளன.
எனவே, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; இக்குழு, சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், அரசுப் பணியாளர் சங்கம், அனைத்து ஆசிரியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, 'ஜேக்டோ, டேக்டோ' மற்றும் அரசு அலுவலர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர், உறுப்பினர்களிடம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி, மனுக்கள் அளித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக