யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/16

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை

3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!' : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ''மூன்று வாரங்களில் பிரச்னைகள் அனைத்தும் சரியாகி விடும். இந்த திட்டத்தால் நாம் அடையப்போகும் லாபங்கள் ஏராளம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:வங்கிகளில் பணம் மாற்றும் பொதுமக்களுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் தரப்படுவதால், ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். இருப்பினும், அரசின் இத்திட்டம் நீண்ட காலப் பயன்களை அளிக்க வல்லது. எனவே, பொதுமக்கள் பொறுமையாக இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சம், ஏ.டி.எம்., இயந்திரங்கள் வழக்கமான முறையில் செயல்பட, இன்னும், மூன்று வாரங்கள் ஆகலாம். மாற்றங்கள்புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பவும், தற்போது புழக்கத்தில் உள்ள, மற்ற நோட்டுகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததால், ஏ.டி.எம்.,களை முன்கூட்டியே மாற்றியமைக்க முடியாமல் போனது. இவற்றை மாற்றியமைக்க, குறைந்தபட்சம், மூன்றுவாரங்களாவது தேவை. அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டு கள் போதிய அளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்டமான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க, வாரக் கடைசி நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், வங்கிகளுக்கும் புதிய நோட்டுகள் முழுமையாக சென்றடைந்த பின், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். இதனால், நம் பொருளாதாரத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கும். அரசியல் கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.சமூக வலைத்தளங்கள் சமூக வலைத் தளங்களி லும், இதுகுறித்து வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
அரசு கண்காணிப்பு : 'ஜன்தன்' திட்டம் மூலம் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில், திடீரென ஏராளமான பணம், 'டிபாசிட்' செய்யப்படுவது குறித்து அரசு கண்காணித்து வருகிறது.
அருண் ஜெட்லி, நிதியமைச்சர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக