யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/11/16

ரூ.500 பழைய நோட்டுகளை டிச.15 வரை பயன்படுத்த அனுமதி.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவுவதைக் கருத்தில் கொண்டு, பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
அதே நேரத்தில் ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. அப்போது, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக, ரூ.100, ரூ.50, ரூ.20 என குறைந்த மதிப்புடைய நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், நவம்பர் 24-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை (நவ.24) நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி, நகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.2,000 வரை கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பலாம்

சுங்கக் கட்டணம் செலுத்தலாம்

மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு பண்டக விற்பனை சாலைகளில் ஒரு முறை ரூ.5,000 வரை பொருள்கள் வாங்கலாம்.

குடிநீர் கட்டணம் செலுத்தலாம்

மின் கட்டணம் செலுத்தலாம்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான தொகையை செலுத்தவும், மருந்தகங்களிலும் மருந்துகளை வாங்கலாம்

சமையல் எரிவாயு உருளை வாங்கலாம்

மெட்ரோ, புறநகர் ரயில்களில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் கட்டணம் செலுத்தலாம்

பேருந்து கட்டணம் செலுத்தலாம்

விமானக் கட்டணம் செலுத்தலாம்

ரூ.500 வரையிலான செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்வதற்கும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக