யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/16

தமிழகம், ஆந்திராவை அதிக புயல்கள் தாக்கும்

இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி ஆந்திரா மற்றும் தமிழகத்தை தாக்கும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிக புயல்கள் உருவாகும் :

வங்கக்கடலில் அடுத்தடுத்து 3 புயல்கள் உருவாகின. இதில், 2 புயல்களும் வலுவிழந்து விட்ட நிலையில் வர்தா புயல் நேற்று முன்தினம் சென்னையை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி ஆந்திரா, தமிழகத்தை தாக்கும் என விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.அலகாபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் 2014-ம் ஆண்டு இது தொடர்பான ஆய்வு நடத்தி எர்த் சயின்ஸ் அறிவியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளனர். 1891-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 122 ஆண்டுகளுக்கு இந்திய கடல் பகுதியில் ஏற்பட்ட புயல்களை ஆய்வு செய்து அதன்படி இந்த கட்டுரையை எழுதி இருக்கிறார்கள்.

தமிழகம், ஆந்திராவுக்கு ஆபத்து :

அதில், தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உருவாகும். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, இந்த புயல்களின் சக்தியும் அதிகரிக்கும் என்று கூறி உள்ளனர். மத்திய எர்த் சயின்ஸ்துறை செயலாளர் மாதவன் ராஜீவன் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்திய கடல் பகுதியில் ஏற்படும் புயலின் வேகம் தீவிர புயலில் இருந்து அதிதீவிர புயலாக மாறி வருகிறது என்று கூறி இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு கட்டுரையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடலின் வெப்பநிலை அதிகரித்து இருப்பதால் புயல் உருவாவதும் இனி அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து உருவாகும் புயல்கள் வர்தா போன்று தமிழகம் மற்றும் ஆந்திராவை பெரிய அளவில் தாக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக