யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/16

கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கூடம் அமைத்த கலெக்டர்!

படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த்.
கேரள மாநிலம், கோழிக்கோடு கலெக்டராக இருப்பவர் என்.பிரசாந்த். இவர் அங்கு பல்வேறு மக்கள் நல பணிகள் செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், தற்போதும் ஒரு செயல் புரிந்து பாராட்டு பெற்றிருக்கிறார்.

சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோழிக்கோட்டில் உள்ள மலப்புரம் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில், மூடப்பட்ட பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு பள்ளி பாதுகாப்பு குழுவும் உத்தரவாதம் அளித்தது.

அதன்படி, கலெக்டர் அலுவலகத்தின் பெரும் பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கி கொடுத்துள்ளார். மேலும், அந்த பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் தங்களுடைய பணியினை செய்வதற்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டரின் செலவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து எந்தவொருமானியமும் பெறாமல், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கலெக்டர் என்.பிரசாந்த்.ஏற்கனவே, பல்வேறு சமூக பணிகளின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கலெக்டர் என்.பிரசாந்த்துக்கு, தற்போது மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்ததற்காகவும் பாராட்டு குவிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக