யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/16

புதுச்சேரி தனியார் பள்ளிகளில் ஸ்வைப் மெஷின்’ மூலம் கல்விக் கட்டணம்: கல்வித் துறை விரைவில் நடவடிக்கை.

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்என உத்தரவிட்டு கல்வித் துறை மூலம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகி யும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் கூட்டம் இன்னும் குறையவில்லை. 
புதுச்சேரியில் தற்போது கடும் பணத் தட்டுபாடு பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத் தும் கல்விக் கட்டணத்தை ரொக்க மாக செலுத்த வேண்டும் என பெற்றோரை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதை யடுத்து கல்விக் கட்டணத்தை ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர விட்டு கல்வித் துறை மூலம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.

பணத் தட்டுப்பாடு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 731 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசுஉதவிபெறும் பள்ளிகள் 33, தனியார் பள்ளிகள் 268 என மொத்தம் 301 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளிலேயே அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் ஏற்பட் டுள்ள பணத்தட்டுப்பாடு காரண மாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்ற னர். குறிப்பாக, வீட்டின் அத்தியா வசிய தேவைகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பெற்றோர் புகார்

இந்நிலையில், தனியார் பள்ளி கள் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் என தொடர்ந்து பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இது தொடர்பாககல்வித் துறை அமைச்சர் மற்றும் கல்வித் துறை இயக்குநருக்கு பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த முடிவை கல்வித்துறை எடுத்துள்ளது.

சுற்றறிக்கை

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, “தற் போது நிலவி வரும் பணத் தட் டுப்பாடு பிரச்சினையால் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்து வதில் சிரமம் உள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும். ஸ்வைப் மெஷினை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படும். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து தனியார் பள்ளி நிர் வாகத்துக்கும் 5-ம் தேதி (இன்று) கல்வித் துறை மூலம் அனுப்பப் படும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக