யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/1/17

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் சுமார் 32 லட்சம் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொண்டு நிறுவனங்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாதான் முதன்மையாக இருக்கிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, 
குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி என சகல துறைகளிலும் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி உதவி கிடைக்கிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஆண்டுதோறும் வரும் வருமானக் கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்கவிட்டால், அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி முறையாக கையாளப்படுகிறதா ? நிதியை கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி ஒரு வழக்கில் கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

அதில், அந்த நிறுவனங்கள், 2014-2015 ஆம் நிதி ஆண்டில் இருந்து தங்களின் ஆண்டு கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

2010-11ம் ஆண்டில் அதிக வெளிநாட்டு நிதி பெற்றிருப்பது டெல்லி (2,016 கோடி). இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு (1,557 கோடி). 2009-10ம் ஆண்டுக் கணக்கின்படி, இந்தியாவிலேயே என்.ஜி.ஓ-க்கள் மூலம் அதிகம் நிதி பெறுவதில் முதல் இடத்தில் இருக்கும் மாவட்டம் சென்னை. 871 கோடி நிதியுதவி பெற்றுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) உரிமம் பெற வேண்டும். கடந்த 2011-2012ஆம் ஆண்டு எஃப்.சி.ஆர்.ஏ. உரிமம் பெறாத தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை ரத்துசெய்து உத்தரவிட்டது.

கடந்த மாதம் வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் 33,000 தொண்டு நிறுவனங்களில், 20,000 தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக செயல்படுவது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவற்றின் நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக