யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/2/17

சொத்து குவிப்பு வழக்கில் 10:30க்கு தீர்ப்பு.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் முதல்வர் கனவும் சற்றே ஆட்டம் கண்டுள்ளது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதி விசாரணையை முடித்த நீதிபதி குன்ஹா ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அப்போது தந்தார். அந்த தீர்ப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் தள்ளப்பட்டனர். ஆனால், இந்த நால்வரும் வழக்கை மேல்முறையீடு செய்தனர். அதில் கர்நாடக உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து முடித்துவிட்டது. ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்தி வைத்துள்ளது.

சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். தற்போது நாளை தீர்ப்பு வெளிவரும் எனக் கூறப்படுவதால் சசிகலாவின் முதல்வர் கனவு பலிக்குமா அல்லது நிராசையாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக