யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/3/17

மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் 2018 - ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: நுழைவுத்தேர்வுக்கு ஏப்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகத்தின் இயக்குநர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனிதநேயம் அறக்கட்டளை யால் நடத்தப்படும் சைதை துரை சாமியின் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகத்தில் 2018-ம் ஆண்டுக் கான ஐஏஎஸ் முதல்நிலைத் தேர் வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட உள்ளன. இப் பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வுசெய்ய ஏப்ரல் 30-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நுழை வுத்தேர்வு நடைபெறும். இத்தேர் வுக்கான வினாக்கள் பொது அறிவு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

இலவச பயிற்சிக்கான மாணவர் தேர்வில் மாவட்ட வாரியாக ஒதுக் கீடு உண்டு. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமலேயே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவர்களும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும்.இலவச பயிற்சிக்கான நுழை வுத்தேர்வு எழுத விரும்புவோர் www.saidais.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே ஆன்லைன் பயிற்சிக்கு விண்ணப் பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 21-ம் தேதி ஆகும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அந்த அனுமதிச்சீட்டில் பாஸ் போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பம் பெற முடியாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அனுமதிச்சீட்டுடன் கொண்டுவர வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 044-24358373 என்ற தொலைபேசி எண்ணிலோ, 98401-06162 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக