யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/3/17

திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் போராட்ட ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்.நாள் - 26.03.2017

26.03.2017 இன்று நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல முறை மாநில அரசை அனுகியும், போராட்டம் நடத்தியும் பணிநிரந்தரம் குறித்து வாய் திறக்கவில்லை.

எனவே மத்திய அரசை நேரில் சென்று அனுக மே மாதத்தில் 2000 பேர்முதல்கட்டமாக டெல்லி  சென்று நேரில் மத்திய மணிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் மாண்புமிகு.திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களை அனுகி நம் நிலையினை எடுத்து கூறி மனு அளித்து தமிழக அரசை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்துவது என்றும்,அகில இந்திய திட்ட அலுவலக செயலாளரை முற்றுகையிட்டு மனு அளிப்பது என்றும், திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, டெல்லி வர உள்ளவர்கள் ஒன்றியநிர்வாகிகளிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆதார் நகல் அளித்து பெயரை முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பிற மாவட்ட நிர்வாகிகள் திரு.என்.வெங்கடேசன் அவர்களை கலந்து ஆலோசிக்கவும் தடுமாறும் தலைமைகளை தவிர்த்து நமக்கு நாமே செயல்திட்டம் வகுத்து செயல்படுவோம்.

*என்.வெங்கடேசன்
*திருவண்ணாமலை
*பகுதிநேர ஆசிரியர்கள் டெல்லி போராட்டக் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக