யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/3/17

பழைய 500,1000 நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் ??மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு !!

ரிசர்வ் வங்கிக் கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கோரியது உச்ச நீதிமன்றம்


ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பின் அந்த நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் 2017-ஆம் ஆண்டு, மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி சார்பில் அப்போது அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் அல்லாது வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே செல்லாத ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ஆம் தேதி வரை குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, வரும் 31-ஆம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சரத் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது, மனுதாரரின் கருத்துகளை கவனத்தில் கொள்வதாகக் கூறிய நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 10) ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக