பொய்யான செய்தியை இந்திய ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன'.*
_கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் பகுதியைச்
சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச்சென்றிருந்தனர். நேற்றிரவில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர்._
_இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற கெம்பலோத் என்பவரது மகன் பிரிட்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது. இதே போல் கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார்._
*இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசையல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.*
_இது குறித்து இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் சமிந்த வலகுலகே கூறுகையில், 'ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. மீனவர்களை கைது செய்வதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர்களை சுட அதிகாரம் இல்லை.; இந்திய ஊடகங்கள் கூறுவது உண்மை தன்மை இல்லாத செய்தி. பொய்யான செய்தியை இந்திய ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன' என்று தெரிவித்துள்ளார்._

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக