யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/3/17

ஓ.என்.ஜி.சி. மறுப்பும் நெடுவாசல் பொறியாளரின் பதிலும்!

நெடுவாசல் திட்டத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. திட்டத்தில் ஷேல் வாயுவோ, மீத்தேன் எரிவாயுவோ எடுக்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி. கடந்த 50 ஆண்டாக காவிரி டெல்டாவில் செயல்பட்ட போதிலும் விவசாயம் பாதிக்கபடவில்லை. .எங்கள் நிறுவனம் செயல்படும் இடங்களில் வாழும்

மக்களிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயுவால் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தினமும் 840 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் நமது மின்னம்பலம் இதழ் சார்பில், ‘நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்நிறுவனம் கூறுகிறதே?’ என்ற கேள்வியை நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் சுரேஷ் ராமநாதனை தொடர்பு கொண்டு கேட்டோம். நாம் கேட்ட உடன் அவர் வாய்விட்டு சிரித்துவிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “ஓ.என்.ஜி.சி.க்குத் தெரியாமல் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் எதுவும் நடக்கவில்லை. எங்கள் கிராமங்களைத் தேர்ந்தெடுத்தது, அங்கே ஆய்வு நடத்தியது, விவசாய நிலங்களை விவசாயிகளிடம் குத்தகைக்குப் பெற்றது என அனைத்தையும் மேற்கொண்டது ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான்.

இதை விட முக்கியமாக, நெடுவாசல், வானக்கண் கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆழ்துளைக் கிணறு அமைத்து அதில் குழாய்களை பதித்தது, வெளிக்குழாய்களை அமைத்தது, எக்ஸ்மஸ் ட்ரீ வால்வு என்று சொல்லக் கூடிய நீங்கள் காணும் எண்ணெய் கிணறின் வெளி அமைப்பை நிறுவியது, அதை சீலிங் செய்தது என அனைத்துமே ஓ.என்.ஜி.சி.தான். இது மட்டுமல்லாமல் இந்த திட்டம் தொடங்குவதற்கு முன் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்ததும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான். நெடுவாசல் கிராமத்தில் தொடங்கப்பட இருந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த முழு விவரமும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது” என்று தெளிவாக விளக்கம் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக