யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/4/17

ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.

ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அதில் ஏற்படக்கூடிய தாமதம், ரயில் டிக்கெட் ரத்து, நடைமேடை எண், குறிப்பிட்ட ஒரு ரயிலின் தற்போதைய நிலை, ரயிலில், துாங்கும் வசதி இருக்கைக்கு வாய்ப்பு உள்ளதா, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இந்த ஆப் அளிக்கும்.டாக்சி சேவையை பதிவு செய்தல், போர்டர் சேவை,ஓய்வு அறை, ஓட்டல், சுற்றுலா பேக்கேஜ், இ - கேட்டரிங் போன்ற, சுற்றுலா தொடர்பான சேவைகளை, புதிய ஆப் மூலம் பெற முடியும். இந்த ஆப் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்களுடன், அதில் கிடைக்கும் வருவாயை, ரயில்வே பகிர்ந்து கொள்ளும்.

இதனால், ஆண்டுதோறும், ரயில்வேக்கு, 100 கோடி ரூபாய்வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ரயில்கள் தாமதமாக வருவது பற்றி, பயணிகளுக்கு தகவல் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபோன்ற குறைபாடுகள், புதிய ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.இந்த புதிய ஆப், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்.

அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.எம்.பி.பி.எஸ்., மாணவி உமா ரவிச்சந்திரனுக்கு, சிறப்பாகதேறியதற்காக, ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல்கலையின் வேந்தர், பட்டம் பெற்ற, 365 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.

பதக்கங்களை வழங்கி, வெங்கையா நாயுடு பேசியதாவது:அரசு மருத்துவமனை இணையதளங்களின் வழியாக, மருத்துவர்களின் சந்திப்பு, மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்த வகைகளை அறிந்து கொள்ள, விரைவில் புதிய வசதிகள் செய்யப்படும். மேலும், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை, தொலைபேசி வழியாக, டாக்டர்களிடம் தெரிந்து கொள்ளவுமான வசதிகளும், விரைவில் துவக்கப்படும். நம் மருத்துவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும், மனிதாபிமானத்துடனும், மருத்துவம் செய்கின்றனர். அதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், மருத்துவ சுற்றுலாவுக்காக, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்கு வருகின்றனர்.ஆனாலும், நாட்டில், 1,668 பேருக்கு, ஒரு அலோபதி மருத்துவர் தான் உள்ளார். அதில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பல்கலை துணைவேந்தர் மூர்த்தி பேசுகையில், ''இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், 39வது இடம்; தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் தேர்வில், 3.62 புள்ளிகளுடன், 'ஏ கிரேடு' பெற்று, ராமச்சந்திரா பல்கலை முன்னிலையில் உள்ளது,'' என்றார்.

NEET' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில்,நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

Download Admit  Card ::http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx

எனவே, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள், 'நீட்' தேர்வை ஏற்று கொண்டுள்ளன. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. விண்ணப்ப எண்,பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடு மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அறைக்கு வருவது குறித்த விபரங்களும், ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டு உள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு தேதி மாற்றம்.

மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள் ஏப்.,22ல் துவங்கின.இந்நிலையில் ஏப்.,29, 30ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) நடக்க உள்ளது.
இதனால் ஏப்.,29ல் நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அத்தேர்வுகள் ஜூன் ௨ அன்று நடத்தப்பட உள்ளது.மேலும், 'ஏப்.,25ல் அனைத்துக் கட்சி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, வினாத்தாள்களை முன்கூட்டியே மையங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என தேர்வாணையர் முத்துச்செழியன் தெரிவித்தார்.

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 
ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநில கல்வியியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது; ஆசிரியர்களும் அனைத்து பாடங்களையும் நடத்துவதில்லை; நேரமின்மையால், சில பாடங்களை விட்டு விடுகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், மாணவர்கள், வீடியோ காட்சியுடன் பாடத்தை கற்கலாம். அத்தகைய மாணவர்களுக்கான, சிறப்பு புத்தகமாக,இந்த வீடியோ பதிவுகள் இருக்கும். கோடை விடுமுறைக்கு பின், வீடியோ தயாரிப்பு பணி துவங்கி, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை பாடத்திட்டம் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Teachers General Transfer 2017-18 :தொடக்கக்கல்வி இயக்குநரின் மூன்றாவது சுற்றறிக்கை

EMIS CORRECTION WORK - Announcement

*EMIS CORRECTION WORK*

வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும் EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில்

> இனம்
> பாட மொழி
> பஸ் பாஸ்
> சத்துணவு
> ஆதார் எண்போன்ற விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- இணை இயக்குனர்  ( நிர்வாகம்)

பல்கலை.கள், உயர் கல்வி நிலையங்களில் விரைவில் ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் அமல்.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன. அத்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்தளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து விட்டார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக பொதுச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதோடு, அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கான துறைகள் இல்லை என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிய வேண்டும். அங்கு ஹிந்தி மொழிக்கான துறைகளை உருவாக்குமாறு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

மேலும், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் குறைந்தபட்ச ஹிந்தி மொழி வழிக் கல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் ஹிந்தி மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் தங்களின் தாய் மொழியில்

இத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையில் தன்னாட்சி அளிப்பதற்காக சில சட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் வகுத்து வந்தன. அவற்றின்படி சில பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது.

இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதற்காக சமச்சீரான ஒரு கொள்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து எதிர்ப்பும், விமர்சனமும் எழலாம் என்று தெரிகிறது.

ஏற்கெனவே, கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன காப்பீடு பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன, அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.

விரிவான காப்பீட்டுத் திட்டம்
ஒரு இரு சக்கர வாகன விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒருவேளை பின்வரும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தால் காப்பளிக்கிறது:
1. விபத்து அல்லது தீ விபத்து, மின்னல் வெட்டு, வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.
2. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தீவைக்கப்படுதல் அல்லது அந்நியர்களால் வன்முறையில் அழிக்கப்படுதல் அல்லது திருட்டு அல்லது கொள்ளை ஆகிய காரணங்களால் வாகனத்தை இழத்தல் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.

விபத்து
3. விபத்துக் காரணமாக மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடளிக்கிறது.
4. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.

இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டம் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக்களுக்கு மட்டும் காப்புறுதி அளித்தால், பின்பு காப்பீட்டு நிறுவனர், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் செலுத்தவும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பணம் செலுத்தவும் மட்டுமே பொறுப்புடையவராகிறார்.
  
உதிரிப் பாகங்கள்
மேலும் சில இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.
  
கணக்கீடு
காப்பீட்டுத் திட்டத்திற்கான முனைமத் தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
  
இணையச் சேவை
இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் சிக்கல்களில்லாதது மேலும் இப்போதெல்லாம் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை இணையத்திலேயே வாங்கிக் கொள்ளவும் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்.

G.O MS : 96 - தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம் -ஆணை வெளியீடு.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

1.பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குநராக மாற்றம்

2.தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குநராக மாற்றம்

3.ஆர்.எம.எஸ்.ஏ இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக மாற்றம்

4.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குநராக மாற்றம்

5.முறைசாரா கல்வி இயக்குநர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாற்றம்

6.பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குநராக மாற்றம்.

24/4/17

பள்ளிப் பாடத்தில் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்க்கை வரலாறு: வெங்கய்ய நாயுடு யோசனை

தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் படைத்த கீர்த்தனைகள் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு யோசனை கூறினார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா அறக்கட்டளை மற்றும் சேவா சமிதி சார்பில் கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ சுவாமிகளின் 250-ஆவது ஜயந்தி விழா மற்றும் மும்மூர்த்திகள் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியது: இளம் தலைமுறையினர் சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல விதமான பாரம்பரியங்களைக் கொண்ட நாம் இந்தியர்களாக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஆனால் அந்நியர்களின் படையெடுப்பு, சுரண்டல் காரணமாக நமது பாரம்பரியத்தை இழந்திருந்தோம். தற்போது அதிலிருந்து மீண்டு பாரம்பரியத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

குற்றமாகப் பார்க்கப்படும் பாரம்பரியம்: நாட்டிலேயே தமிழகம் மட்டும்தான் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. ஹிந்து என்ற சொல் நமது பாரம்பரியத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான சொல். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வார்த்தை அரசியலுக்காக குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இசை மனதுக்கு ஆத்ம திருப்தியை வழங்குவதோடு, சாந்தம், பரவசம், ஆன்மிகம் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தை தியாகராஜர், சியமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் நமக்கு வழங்கியுள்ளனர். இத்தகைய பாரம்பரிய சிறப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தியாகராஜ சுவாமியின் அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு ஆவன செய்யும் என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழா மலரையும் வெளியிட்டார்.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் ஆகியோர், இசை பாரம்பரியமாக இருந்து வருகிறது. வட மாநிலத்தவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தைப் பரப்ப வேண்டும். அத்துடன் பக்தி மார்க்கங்கள் வளர வேண்டும் என்றனர்.

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது.

என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம்.
இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம்.

எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும்.
இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

TNTET - 2017 தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.

பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், தாள்-1 தேர்வுக்கு, 8,171 பேரும், தாள்-2 தேர்வுக்கு, 15 ஆயிரத்து, 671 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்காக, 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பில், 1,300 ஆசிரியர்கள், பிற துறை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஈரோட்டில் கடந்த, இரு நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது: தேர்வு எழுதுவோர், தங்கள் உடையில், உடலில் மறைத்து ஏதேனும் எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்டறியும் விதமாக, உடலை தடவி பார்த்து முழுமையாக பரிசோதனை (பிரிஸ்கிங்) செய்யப்படும். தமிழகத்தில் தேர்வுக்கு இம்முறையை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஆண்களுக்கு ஆண் போலீசாரும், பெண்களுக்கு பெண் போலீசார், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவியர் பயன்படுத்தப்படுவர்.

 தேர்வு எழுதுவோர் மட்டுமின்றி, அறை கண்காணிப்பாளர்களும் எலக்ட்ரானிக் வாட்ச், பேஜர், மொபைல்போன், கால்குலேட்டர் மட்டுமின்றி கர்சீப்பையும் அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது.ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள், வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் கிடைக்கப் பெறாதவர்கள், வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து, பெற்று வந்தால் தேர்வு எழுதலாம். தேர்வு நடக்கும் அறைக்குள், மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

TET தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.

பிறப்பிப்பதற்குமுன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்குகல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பதவி இடம் கடந்த 2011-ம்ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி காலியானது. இந்த பதவியை நிரப்ப அதேஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பள்ளி நிர்வாகம், உதவி தொடக்கப்பள்ளிஅதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதையடுத்து அந்தபதவியை நிரப்ப, உதவி தொடக்கப்பள்ளி அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டுஜனவரி 31-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலைவாய்ப்புமையத்தில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டன. பள்ளிநிர்வாகமும் காலிப்பணியிடம் குறித்து பொது விளம்பரம் வெளியிட்டது. இதன்பின்னர் நடந்த நேர்முகத் தேர்வில், சரவணபாபு என்ற ஆசிரியர்கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்றேஅவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.

ஒப்புதல் அளிக்கவேண்டும்.

இவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, மாவட்ட தொடக்கல்விஅதிகாரிக்கு, பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஆனால், '2000-ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கூடத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி, அந்த பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட அதிகாரி மறுத்துவிட்டார்.இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் பணிநியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரியின் உத்தரவை ரத்து செய்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்குஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தகுதி தேர்வு

இந்தஉத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தொடக்கக் கல்விஇயக்குனர், நாகப்பட்டினம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர்மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள்சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், 'மத்திய அரசுகடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தகுதி தேர்வு மூலமே ஆசிரியர்கள் நியமனம்நடைபெறவேண்டும் என்று தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்கத்தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்றுகூறியிருந்தார்.

நாடவில்லை

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.என்.ரவிசந்திரன், 'தகுதி தேர்வுமூலமே ஆசிரியரை தேர்வு செய்யவேண்டும் என்ற அரசாணை 2011-ம்ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த காலிப்பணியிடம் அதற்கு முன்பே ஏற்பட்டு, அந்த இடத்தை நிரப்பஅரசிடம் அனுமதிக்கேட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதமே பள்ளிநிர்வாகம் மனு கொடுத்து விட்டது' என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-ஆசிரியர் சரவணபாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததைஎதிர்த்துத்தான் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆசிரியர்தகுதி தேர்வு மூலம், இவரை தேர்வு செய்யவில்லை என்று இந்தஐகோர்ட்டை நாடவில்லை.

நிரப்பலாம்

அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று அரசுஉத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, ஏற்பட்ட காலியிடத்தில்தான்ஆசிரியரை பள்ளிநிர்வாகம் நியமித்துள்ளது.மேலும், ஆண், பெண்ஆசிரியர்கள் விகிதாச்சாரம் தொடர்பாக பக்தவச்சலம் என்பவர்தொடர்ந்த வழக்கில், பெண்களை கொண்டு நிரப்பவேண்டிய அரசுபணியிடத்துக்கு தகுந்த பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ஆண்களை கொண்டு நிரப்பலாம்' என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவேஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.எனவே, சரவணபாபு நியமனத்துக்குதொடக்கக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும். தனி நீதிபதியின்உத்தரவில் எந்த குறைபாடுகளும் இல்லை. அவரது உத்தரவை உறுதிசெய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

23/4/17

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 -தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை- 2



25ம் தேதி வேலை நிறுத்தம் அரசு பணியாளர்கள் ஆதரவு

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர், செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை:

எட்டாவது ஊதியக் குழு பணிகளை முடித்து, ஊதிய உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊதிய உயர்வு ஆணைகள் வெளியிடும் வரை, அனைத்துப் பணியாளர்களுக்கும், 20 சதவீத, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, அரசுப் பணியாளர்கள் அனைவரும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

சென்னை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. 


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர். 

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர். 

இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர். 

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு | மே 7-ல் நடக்கும் நீட் தேர்வுக் கான ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில்

275 பொறியியல் கல்லூரிகளை மூட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் தகவல்.

இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்தார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில்சார்பில், ‘மின் னணு வழி கற்றல்: சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத் தில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த அனில் டி.சஹஸ்ர புத்தே செய்தியாளர்களிடம் கூறிய தாவது:சில கல்வி நிலையங்களில் 10 முதல் 15 ஆண்டுகளுக்குக்கூடபாடத்திட்டத்தை மாற்றாமல் வைத் துள்ளனர். தற்போதுள்ள சூழ லுக்கு ஏற்ற தரமான பாடத் திட்டங் களைக் கற்பிக்காததால், அந்த நிறுவனங்களில் படித்த மாணவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்ப தில் சிரமம் ஏற்படுகிறது.எனவே, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளன. மாணவர்கள் சேர்க்கை குறை வாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.மின்னணு வழி கற்றல் முறைக் காக மத்திய அரசு உருவாக்கி யுள்ள ‘ஸ்வயம்’ என்ற ஆன்லைன் கல்வி முறையில் தற்போது 280பாடங்கள் உள்ளன. மேலும் 350 பாடங்கள் அதில் இணைக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பாடங்கள் ஆன்லைனில் இருக்கும்.

பொறியியல் கல்விக் கான பாடங்கள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் ஆன்லைனில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.சில கல்வி நிறுவனங்களில் உரிய அனுமதி இல்லாத பாடங் களை நடத்துவது குறித்த புகார் கள் வந்துள்ளன. அந்தப் பாடப் பிரிவுகளை நடத்த தடை விதிக் குமாறு, அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.சென்னை அல்லது கோவை யில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடங்களைக் கற்பிக்க பிரத் தியேக மையம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.இந்த பயிற்சி முகாமில் ஏஐசிடிஇ இயக்குநர் மன்பரீத் சிங்மன்னா, கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, பிரிட்டிஷ் கவுன்சில்தலைமை நிர்வாகி பருல் குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: மின் ஆளுமை முகமை அறிவிப்பு.

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப் பித்தல் மற்றும் திருத்தங்கள் செய் வதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவித் துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின்கீழ், கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை அவர்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கமாகும்.இச்சேவை மையங்கள் மூலம், வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள், பல்வேறு உதவித் திட்டங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், இதில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம், மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வாரியத் துக்கு செலுத்த வேண்டிய குடி நீர் வரியையும் செலுத்தலாம்.இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதல் சேவைகளை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வரும் 24-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் பெற பொதுமக்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். 
இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர்.

இந்நிலையில்,இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு புறக்கணிப்பு : முதுநிலை ஆசிரியர்கள் முடிவு.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஏப்.,29 அன்றும், 2ம்தாள்தேர்வு ஏப்.,30ம் தேதியும் நடக்கிறது.இத்தேர்வு பணியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல முதுநிலை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நியமனம் செய்யப்படுவதால், பல ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மூத்த முதுநிலை ஆசிரியர்கள், பணியில் இளையோரான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், துறை அலுவலர்களாக பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் துறை அலுவலர்களான பட்டதாரி ஆசிரியர்களின் கீழ் அறைக் கண்கணிப்பாளராகவும் செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆசிரியர் தகுதி தேர்வு பணிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், என மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

சங்க மண்டலச் செயலாளர் கதிரேசன், மாவட்டத் தலைவர் சலேத்ராஜா கூறியதாவது: அனுபவத்திலும், தகுதியிலும் குறைந்தவர்களுக்கு கீழ் பணி செய்ய அறிவுறுத்துவது எந்த நிலையிலும் ஏற்பதற்குஇல்லை. அதனால் சங்க கூட்டத்தில் 'டெட்' தேர்வை புறக்கணிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.

தொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல்- கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
(நாள்: 20.04.2017) ||தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

Lab Asst Appointment - Chennai District Selected Candidates List

DEE - Elementary Education Teachers Transfer Form - 2017 -18 (New)

தொடக்கக் கல்வி இயக்ககம் -2017-2018 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி /இடைநிலை /உடற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும்புதிய விண்ணப்பம்.


பள்ளிகளுக்கு விடுமுறை பயறு வாங்க அவசரம் ஏன்?

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மையங்களுக்கு, பயறு வகைகள் வாங்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் அவசரம் காட்டுகிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சத்துணவு மையங்கள் உள்ளன. இவற்றில், வாரத்துக்கு ஒரு நாள், ஒரு மாணவருக்கு, தலா, 20 கிராம் கருப்பு கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, பயறு வகைகளை வாங்கி, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாணிபக் கழகம், 600 டன் கருப்பு கடலை; 500 டன் பச்சை பயறு வாங்க அவசரம் காட்டி வருகிறது.

இது குறித்து, வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளிகள் துவங்கும் சமயத்தில், பயறு வாங்கினால், சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே, தற்போது, ஐந்து கோடி ரூபாய்க்கு, இரு வகையான பயறு வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதில், நிறுவனங்கள் பங்கேற்க, மே, 19 கடைசி நாள். அடுத்த மாத இறுதிக்குள் பயறு வாங்கப்பட்டு, ஜூனில் பள்ளி திறக்கும் முன் சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன்' கல்வியில் மருத்துவ, சட்ட பாடங்கள்:ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்.

ஆன்லைன் கல்வி திட்டத்தில், மருத்துவம் மற்றும் சட்ட பாடங்கள் சேர்க்கப்படும்,'' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

'ஸ்வயம்' திட்டத்தில், தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பங்கேற்ற, அனில் சஹஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:

சில கல்வி நிறுவனங்கள், 15 ஆண்டுகளாக பாடத்திட்டங்களை மாற்றிஅமைக்காமல் இருப்பது, மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு சவாலாக அமைகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப, கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

ஏ.ஐ.சி.டி.இ., வரையறை செய்யும் பாடத்திட்டத்தை, 70 முதல், 80 சதவீதம் பயன்படுத்தி, மற்றதை, பல்கலைகளே நிர்ணயிக்கலாம். நாடு முழுவதும், 275 இன்ஜி., மற்றும் தொழில்
நுட்பக் கல்வி நிறுவனங்கள், தானாக முன்வந்து மூட விண்ணப்பங்கள் அளித்து உள்ளன.
'ஆன்லைன்' மூலம் கல்வி கற்பதற்காக, அமைக்கப்பட்ட, 'ஸ்வயம்' திட்டத்தில், 280 பொறியியல் பாடப்பிரிவுகள் மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளன.

மேலும், 350 பாடங்களுக்கான வரையறைகள் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மருத்துவம், சட்டம் என, பல்வேறு துறைகளில், 2,000 பாடங்கள், 'ஸ்வயம்'
திட்டத்தில் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் - ஆசிரியர் கழக முறைகேடுகள் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பு.

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல
ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், உறுப்பினர்கள் இடம் பெறுவர். மாணவர்களின் பெற்றோர் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர், செய-லர், பொருளாளர் போன்றோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், அரசியல்வாதிகள், செல்வாக்கான அதிகாரிகள், உள்ளூர் அரசியல் செல்வாக்கு கொண்ட தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பிடியில், பெற்றோர் -
ஆசிரியர் கழகம் சிக்கியுள்ளது.

எது நடக்கிறதோ இல்லையோ, பெற்றோர் - ஆசிரியர் கழகம் பெயரில், ரசீது அச்சடித்து, மாணவர்களிடம் வசூல் நடக்கிறது. வெளியில், நன்கொடையும் வசூலிக்கின்றனர்.இந்த தொகைக்கு, தணிக்கையும் இல்லை; கண்காணிப்பும் இல்லை. தலைமை ஆசிரியரும், பி.டி.ஏ., தலைவரும் என்ன கணக்கு சொல்கின்றனரோ, அதை பெற்றோர் நம்ப வேண்டும்.

அதேபோல், உள்ளூர் அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்கவர்கள், கவுரவ பதவிக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை பயன்படுத்துகின்றனர்.விதிகளின்படி, அந்த பள்ளியில், தங்கள் பிள்ளை கள் படித்தால் மட்டுமே பதவி உண்டு. பேரன், பேத்தி பெற்ற பிறகும், பலர் பதவியை விடாமல் உள்ளனர்.

பெற்றோர் கூறுகையில்,'அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவதற்கு,பெற்றோர்- ஆசிரியர் கழகம் சரியாக இயங்காதது தான், முதல் காரணம். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்
படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழகம், 'கவனிப்பதால்' அவர்களும் கண்டு கொள்வதில்லை' என்றனர்.

புதிய தொழில் பள்ளிகள் 30ம் தேதி கடைசி நாள்

புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

தனியார் தொழில் பள்ளிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத, 54 நீண்ட கால தொழில் பிரிவுகள்; 36 குறுகிய கால பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன.புதிதாக தொழில் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்கவும், ஒவ்வொரு ஆண்டும், ஜன., 2 முதல் ஏப்., 30 வரை, விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த ஆண்டு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், விண்ணப்பிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).

குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.

தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____

NEFT : National Electronic Fund Transfer

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.

NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
_______

மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.


IMPS : Immediate Payment Service

24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.

UPI : Unified Payments Interface

இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை.

அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

பள்ளிக்கல்வி - கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இதர வாரிய பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கால அட்டவணை

தொடக்கக் கல்வி 2017-18ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

22/4/17

ஊழியர் நலனில் அக்கறையில்லாத அரசு: ஊழியர்கள்சங்கம் புகார்

தற்போதைய தமிழக அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மதுரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில், ஆதரவு திரட்டிய, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் கூறியதாவது:காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து, மார்ச்சில் அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விட்டோம். இதுவரை, சங்க நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. இடைக்கால நிவாரணம் குறித்து, புதிய ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும்.

 சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, காலமுறை சம்பளம் வழங்குவதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. எனவே, 61 துறை ஊழியர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், உள்ளாட்சி தேர்தல் உட்பட, பல்வேறு பணிகள் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது - பள்ளிக்கல்வி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது. 
இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளன. சில பள்ளிகள், மதம் சார்ந்த வகுப்புகளும், சில பள்ளிகள், பிளஸ் 2 மற்றும் பத்தாம்வகுப்புகளுக்கு, சிறப்பு வகுப்பும் நடத்துகின்றன.இதையடுத்து, 'எந்த பள்ளியும் கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, பள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்

'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.

இதில், 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர்.பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிச.31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்?- மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆலோசனை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும் அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

*பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதை முன்னி லைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டியது அவசியம்.

*அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகப்படுத்துவது தொடர்பாக உதவி மற்றும் கூடு தல் தொடக்கக் கல்வி அதிகாரி களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.

*அங்கன்வாடிகளில் படிக்கும் குழந் தைகளைக் கண்டறிந்து அவர் களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

*அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், ஸ்கூல் பேக் ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

*அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் உதவியுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

*மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டிடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருப்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூற வேண்டும்.

*குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான ஆங்கிலவழிக் கல்வி வழங்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் மற்று மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

*இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு.

ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர்.இதற்காக, ஆங்கில மொழி அறிவு உடைய ஆசிரியர்களை, புதிதாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, ஆங்கில திறன் கொண்டவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறை மாற்றப்பட உள்ளது. முதலில் போட்டி தேர்வுகளுக்கான, விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது.

அதேபோல், வரும் காலங்களில் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வையும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, மற்ற துறைகளுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை, கணினி வழி தேர்வாக மாற்ற, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்: உயர் நீதிமன்றம்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அளித்திருந்த தளர்வை ரத்து செய்து முன்பு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு ஒன்றினை தொடர்ந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தாவது:

விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு சட்டத்தில் முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த தமிழக அரசு மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க 2016-ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தி : உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தெரிவித்ததாவது:

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக இந்த நீதிமன்றம் அளித்திருந்த தளர்வு ஆணை ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான வரைவு சட்டத்தை தமிழக அரசு தயார் செய்யும் வரை, அந்த சட்டமானது தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் வரை இந்த தடை தொடரும்.

தளர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோள் தள்ளுபடி செய்யபப்டுகிறது. இது தொடர்பாக குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் நடக்காத பொழுது என் தளர்வை ரத்து செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கை மே மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆசிரியைகள் அடிதடி மோதல் : 5 பேர் அதிரடி 'சஸ்பெண்ட்'

ஊத்தங்கரை அருகே, ஆசிரியைகள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியை உட்பட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், லக்கம்பட்டி நடுநிலை பள்ளியில், 61 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 
தலைமை ஆசிரியை நிர்மலா, 42, உதயசிவசங்கரி, 28, உட்பட மூன்று பெண் ஆசிரியைகள், ஒரு ஆண் ஆசிரியர் பணிபுரிந்தனர். உதயசிவசங்கரி, நிர்மலா இடையே சுமுக உறவு இல்லை.
பள்ளியில் நேற்று, இறுதித்தேர்வு நடந்தது. உதயசிவசங்கரி, தாமதமாக வந்ததால், தலைமை ஆசிரியை நிர்மலா, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வினாத்தாள்களை வழங்கி, தேர்வு எழுத ஏற்பாடு செய்தார்.
இதனால், ஆத்திரமடைந்த உதயசிவசங்கரி, 'நான் இல்லாமல், என் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்தலாம்' என, வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர்.

சமாதானம் செய்ய வந்த இதர ஆசிரியைகளையும் உதயசிவசங்கரி தாக்கினார். இதனால், உதயசிவசங்கரியை மற்ற ஆசிரியர், ஆசிரியைகள் சேர்ந்து தாக்கினர்.
இவர்களின் மல்லுக்கட்டு சண்டையை பார்த்த மாணவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த கிராம மக்கள், பள்ளியில் குவிந்தனர். ஜாதி பெயரை சொல்லி தன்னை அடிப்பதாக, உதயசிவசங்கரி, பொதுமக்களிடம் கூறினார்.

இதனால், நான்கு பேரையும் அறையில் அடைத்து விட்டு, உதயசிவசங்கரியை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
ஊத்தங்கரை டி.எஸ்.பி., அர்ஜுனன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாபு, ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தலைமை ஆசிரியை நிர்மலா, உதயசிவசங்கரி உட்பட, ஐந்து பேரையும், 'சஸ்பெண்ட்' செய்து, பாபு உத்தரவிட்டார்.
நிர்மலா, உதயசிவசங்கரி தனித்தனியே அளித்த புகாரை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கீகார விதிகளை மீறிய 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.,நோட்டீஸ்

அங்கீகார விதிகளை மீறி, தில்லுமுல்லு செய்த 13 பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தில், ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், ௬௬௦ பள்ளிகள் உட்பட, நாடு முழுவதும், 18 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.

அதிக கட்டணம் : மேலும், பல பள்ளிகள், மெட்ரிக்கில் இருந்து, சி.பி.எஸ்.இ.,க்கு மாற தயாராகி வருகின்றன. இவ்வாறு மாறும் பள்ளிகள், எதற்கும் கட்டுப்படாமல், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், ஒவ்வொரு மாநிலத்திலும், சில பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தியது. அப்போது, பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை : இதனால், தமிழகத்தில், திண்டிவனத்தில் உள்ள, தாகூர் சீனியர் செகண்டரி பள்ளி உட்பட, 13 பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், 'நோட்டீஸ் கிடைத்த, 30 நாட்களுக்குள் சரியான பதில் தராவிட்டால், சி.பி.எஸ்.இ., வாரியம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்ட முறைகேடுகள்?

l பல பள்ளிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முதல்வர், நுாலகர், ஆய்வகப் பணியாளர்
இல்லை

l தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவில்லை

l நுாலகம், ஆய்வகம், போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை. பள்ளி அமைந்திருக்கும் நிலம், இரண்டு பிரிவுகளாக உள்ளது; போதிய
பாதுகாப்பு வசதிகள் இல்லை

l ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்படவோ, நியமனம் செய்யப்படவோ இல்லை. அரசு
விதிகளின்படி, ஊதியம் வழங்கப்படவில்லை

l மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை

l ஆசிரியர்களின் எண்ணிக்கை போலியாக, சி.பி.எஸ்.இ.,க்கு வழங்கப்பட்டுள்ளது

l சில பள்ளிகளில், அனுமதியின்றி, மாணவியருக்கு தனிப்பிரிவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

l நடுநிலைப் பள்ளி அங்கீகாரம் பெற்று, பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்

l போதிய விளையாட்டு மைதானம் இல்லை; தரமான குடிநீர், தீ தடுப்பு, சுகாதார வசதிகள்
செய்யவில்லை. இது போன்று பல தில்லுமுல்லுகள் தெரிய வந்துள்ளன.

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 703 சிறப்பு அதிகாரி வேலை

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 703 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வணிகவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: Bank of India (BOI)
மொத்த காலியிடங்கள்: 702
பணியிடம்: இந்தியாவில் எங்கும்

 பணி - காலியிடங்கள் விவரம்:
1. Officer (Credit) - 270
2. Manager - 400
3. Security Officer - 17
4. Technical (Appraisal) - 10
5. Technical (Premises) - 05

வயதுவரம்பு: 10.04.2017 தேதியின்படி 21 - 30, 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. Junior Management Grade Scale - I (JMGS I) பிரிவினருக்கு ரூ.23700-42020, Middle Management Grade Scale - II (MMGS II) பிரிவினருக்கும் ரூ.31705-45950

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2017
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: May/June 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofindia.co.in/pdf/BOI-ADVT-GBO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TNTET - 2017 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார்.

அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

● டெட் தேர்வில் எந்த குளறு படியும் இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்

● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்

● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்

● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்

● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது

● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

சம வேலைக்கு சம ஊதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- !!!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறை அனைத்து பணி மற்றும் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் தினசரி ஊதியம், தற் காலிக பணியாளர், ஒப்பந்த ஊழி யர் ஆகியோருக்கு நிரந்தர பணி யாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவுக்கு ஊதியம் வழங்கப் பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.



சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதானது, அடிமைத் தனமாகக் கருதப்படும். அடக்கு முறை, அடக்கி ஆளுதல், சிறுமைப் படுத்தல் ஆகியவை போலத்தான் கருதப்படும். தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்து துறையிலும் கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதிய மானது குறைந்தபட்ச ஊதிய விதி யைக் கூட பூர்த்தி செய்யவில்லை என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மாநில அரசுக்கு சாதகமாக அம்மாநில நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை அளிக்காம லிருக்க பல்வேறு செயற்கையான காரணங்கள் கூறப்படுவதாக தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோரடங்கிய அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்கப்படும். இதில் மாற்று கருத்துகளுக்கு இடமிருக்க முடி யாது. வேலை நிறுத்தம் போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கிய காரணமே தாங்கள் கவுரமிக்கவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறைந்த ஊதியத்திற்காக யாருமே பணியாற்ற முன் வருவ தில்லை. ஆனால் அவ்விதம் நிர் பந்திக்கப்படுகின்றனர். அந்த குறைந்தபட்ச ஊதியத்தின் மூலம் தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளதுதான் நிதர்சனம். இதனாலேயே தங்களது சுயமரி யாதை மற்றும் சுய கவுரவத்தை இழந்து குறைந்த ஊதியத்தில் பணி புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது. இதன் விதிமுறைகள் ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்ட விதிகளில் பல்வேறு விளக் கங்கள் இருந்தாலும் இந்திய அரசி யலமைப்பு விதி 141-ல் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஊழியர் நிரந் தரப் பணியாளரா அல்லது தற் காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது. ஊதியம் அனை வருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை: இன்று இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் ??

பள்ளிக்கல்வி துறை: இன்று இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் மதுரை கள்ளர் சீர்மரபினர் இணை இயக்குனர் பொன். குமார் சென்னை மாநிலஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
( SCERT)இயக்கத்திற்கும், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி  (SCERT)  இயக்குனரக இணை இயக்குனர் திரு. குப்புசாமி மதுரை கள்ளர் சீர்மரபினர் இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!!!

தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.



இந்த விஷயம் குறித்து அந்த அறிக்கையில், 'பல வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன.

 அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.


குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்-அப் பயனர்கள் இருக்கின்றனர்.

போர் அடிக்குது என்று சொல்லும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் – கோடை விடுமுறை டிப்ஸ் !!

கோடை விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மூளைப் பகுதியில் உள்ள ஹிப்போ 
கேம்பஸ் பகுதியில் காணப்படும் நரம்பு செல்கள் அழிந்து, நினைவாற்றல், கற்றல் திறன்களை பாதிக்கின்றன. மாறாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்:

• அவர்களிடம் அதிகமாகப் பேசுங்கள், இதனால் அவர்கள் நண்பர்கள் சொல்வதைக் கேட்பதை விட நீங்கள் சொல்வதை நம்புவார்கள்.
• கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஜூ, பறவைகளுக்கு உணவளிக்க, மீன்களுக்கு உணவளிக்க, குழந்தைகள் காப்பகம், மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, முதியோர் இல்லம், அரசாங்க அலுவலகங்கள் என வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
• சிறிய தோட்டம் போட்டு, பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வையுங்கள். பறவைகளின் வாழ்க்கையை அமைதியாக நோட்டமிட வையுங்கள்.
• அன்பு, கருணை, பிரியம் போன்றவற்றை பணத்தால் வாங்க முடியாது அதைக் கொடுத்தால் தான் நமக்கு அவை திரும்பக் கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
• கம்ப்யூட்டர் மற்றும் தொலைக் காட்சி முன்பு இருப்பதை விட நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை ஊக்குவியுங்கள்.
• வீட்டில் சிறிய பொறுப்புகளைக் கொடுத்து முடிக்கச் செய்யுங்கள்.
• எளிதான ஆரோக்கியமான சமையல் செய்ய சொல்லிக் கொடுங்கள்.
• உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் கையால் செய்த சிறிய பரிசை கொடுக்கச் சொல்லுங்கள்.
• உடற்பயிற்சியை அவர்களுடன் இணைந்து செய்து கொண்டாடுங்கள்.
• சிறிது பணத்தைக் கொடுத்து, மினி பட்ஜெட் போட்டு செலவளிக்கவும், சேமிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
• கூட்டாக விளையாடும் விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பி, கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள்.
• புத்தகம் வாசிக்கப் பழக்குங்கள்.
• சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், வளமாவும் வைத்துக் கொள்ள நண்பர்களுடன் இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்.