யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/5/17

இன்ஜி., கலை கல்லூரிகளில் பிளஸ் 1 பாடம் கட்டாயமானது

பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு நடத்தப்படாததால், கல்லுாரிகளில், பிளஸ் 1 பாடங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 


அதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இதை, தனியார் பள்ளிகள் தவறாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடங்களையே நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே நடத்தினர். 

அதனால், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள், அங்கு அடிப்படை பாட அறிவு இல்லாமல், பருவ தேர்வில் தோல்வி அடைகின்றனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து, அண்ணா பல்கலையின் இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்களில், முதல் செமஸ்டர் தேர்வில், 22 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. 

தேர்ச்சி பெற்றவர்களில் பலர், குறைந்த மதிப்பெண்ணே பெற்றனர்.இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கும், கட்டாய பொதுத்தேர்வு நடத்த வேண்டும். 

பிளஸ் 1 மதிப்பெண்ணையும், உயர்கல்விக்கான, ’கட் ஆப்’ மதிப்பெண்ணாக்க வேண்டும் என, அண்ணா பல்கலை சார்பில், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, பிளஸ் 1 படிக்காமல், பெரும்பாலான மாணவர்கள், பிளஸ் 2 முடித்துள்ளதால், அவர்களுக்கு, மீண்டும் பிளஸ் 1 பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக, அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளிலும், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், பிளஸ் 1 பாடம், கட்டாய தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 

முதல் செமஸ்டரில், 60 வகுப்புகளில், பிளஸ் 1 பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை, இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், ’பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற முன் தயாரிப்பு வகுப்புகளில் நடத்தி முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 பாடம் தெரியாமல், எந்த மாணவருக்கும், இன்ஜினியரிங் பாடம் நடத்த வேண்டாம் என, பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக